பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர். கா. கோவிந்தன் 109.

தான்ை வழிபட்டு இல்லறப் பயனை ஆற்றிச் சிறப்படை தலே செயற்பால தாம். ஆதலின், கவலாது செல்க' என்று கூறித் தேற்றி, மீளுமாறு செய்வர். நிற்க;

தலைவன் ஊர் சேர்ந்த தலைவனும், தலைவியும் ஆண்டுத் தமர் அறியாமலோ, அல்லது மீண்டு வந்த தலைவி இல்லத்தில் தமர் அறியவோ மணம் புரிந்து கொள்வர். ஈண்டு, தமர் அறியாமல் களவில் ஒழுகிய தலைமக்கள்.பலர் அறிய மணம் செய்துகொள்வதற்காகக் கூறப்பட்ட, "பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்,ஐயர் யாத்தனர் கரணம் என்ப" (தொல் பொ. 145) என்ற தொல்காப்பியச் சூத்திரம் பற்றி ஒரு சிறிது கூறி மேலே செல்வாம். களவொழுக்கம் மேற்கொண்டு ஒழுகிய தலை மக்களுள் தலைவனோ, தலைவியோ பின்னர் இவரை முன்னர் அறியேன்” என்பன போன்ற பொய்யுரைகளைக் கூறுதலானும், ஒருவரை ஒருவர் தொடர்பு இன்றி விட்டு விடுதல் போன்ற வழுக்கள் மலிந்துவிட்டமையானும் இது' போன்ற பொய்யையும் வழுவையும் போக்குதற். பொருட்டே சான்றோர் முதலாயினார், அவர்கள் இரு வரும் பலர் அறிய மணம்புரிந்து கொள்ளுதலாகிய சடங் கினை உண்டாக்கினர் என்பதே இச்சூத்திரத்திற்குக் கூறப்படும் பொருளாம். இனி, அவ்வாறு அவர்களிடையே பொய்யும் வழுவும் தோன்றின எனின் அவர்கள் தலைமக் கள் என்னும் தகுதிப்பாட்டிற்குத் தக்கவராகார் ஆதலி னாலும், அவ்வாறு தங்களிடையே உண்மை அன்பின்றிப் பிரிந்து வாழமுயல்வாரைச் சடங்கின் மூலமோ, அன்றி வேறு எவற்றின் மூலமோ சேர்த்து வைப்பினும், அவர்கள் இருவரும் உளம் ஒன்றி வாழார் ஆதலின், அச்சடங்காற். பயனில்லை ஆதலினாலும் அச் சூத்திரத்திற்கு அவ்வாறு: பொருள் கூறுதல் பொருத்துவதன்று; அன்பால் கடித்

தமர் அறியாமல் களவில் ஒழுகும் தலைமக்களின் ஒழுக்கம். பற்றிப் பிறர் பொய்யும் வழுவும் நிறைந்த அலர் உ.ை