பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

310 காவிரி

கள்ைக் கூறுவராயின் அவ்வலர் உரைகளைப் போக்குதற் பொருட்டே, அவர்கள் இருவரும் பலரும் அறிய மணம் புரிந்து கொள்ளுதலாகிய சடங்கினைச் சான்றோர் உண் டாக்கினர் என்று கூறலே அச் சூத்திரத்திற்குப் பொருந் திய பொருளாக இருத்தல் கூடும் என யான் எண்ணுகின் றேன்; அறிவுடைப் பெருமக்கள் ஆய்ந்து உண்மை துணி வார்களாக, -

இனி, மணம்புரிந்த தலைமக்கள் இல்லறம் ஆற்றும் இயல்பினைச் சிறிது நோக்குவாம்: "அறவோர்க்கு அளித்தலும், அந்தணர் ஒம்பலும், துறவோர்க்கெதிர்த லும், தொல்லோர் சிறப்பின், விருந்தெதிர் கோடலும்’ ஆகிய இல்லறப் பண்புகளில் ஒரு சிறிதும் வழுவாது நிற்கும் தலைமகள், ஒருநாள் இரவிடை விருந்து வந்த தாக, இளையோர் அடியோர் ஆயம் முதலாய பலரும் இருப்பவும், நல்லிசை விருந்தாற்றுதற்குரிய உணவினைத் தான்ே செய்தல் வேண்டும் என்னும் பெருவிருப்பால், நெய்யை மிகுதியாகவிட்டுக் கொழுவிய தசையைச் சமைப்புழி எழுந்த புகை படிந்த நெற்றியின்கண், சிறிய நுண்ணிய பலவாய வியர்வைநீர் தோன்றக் குறுநடை நடந்து செல்லுகின்றாள்; அவள் நடைகண்டு உளம் மகிழ்

கின்றான் தலைமகன்; (நற், 41). -

இனி இவ்வாறு வளத்திலன்றி, வறுமையில் ஆற்றும் இல்லறமும் ஈண்டு நினைத்து இன்புறுதற்குரியது. இல் லறம் ஆற்றும் தன் மகளின் இயல்புகளைக் காணச் செல் லுகின்றாள் தாய் ஒருத்தி. அத்தலைவன் இல்லமோ வறுமை நிறைந்துளது; தன் மகள் தந்தை இல்லத்தே உள்ள வளம் மிக்க செல்வத்தையும் நினைக்கின்றாள் இல்லை. முப்பொழுதும் உண்ணுதற்கு வாய்ப்பு இன்மை யால் பொழுது மாறி உண்ணுகின்றனர். தலைவன் கூற்றிற்கு மறுத்துரை கூறாமல் அவன் குறிப்பறிந்து நடக்