பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர். கா. கோவிந்தன் - 111

கின்றாள் தலைவி. இவற்றையெல்லாம் காணுகின்றாள்

தாய். பண்டை நிகழ்ச்சிகள் ஒன்றன் பின் ஒன்றாய் அவள்

மனத்திடைத் தோன்றி மறைகின்றன; அவற்றுள் ஒன்று:

அன்பே உருவாய் அமைந்த செவிலி ஒரு கையில் தேன் க ல ந் த இனிய சுவை மிக்க பாற்சோறு நிறைந்த ஒளிவிடும் பொற்கலத்தையும், மற்றொரு கையில் மெல்லியகோலையும் ஏந்தி வருகின்றாள்.முத்துப் பாலிட்ட சிலம்பணிந்த தலைவி அச் சிலம்பொலிக்க விளையாடுகின்றாள். செவிலி அவளை நெருங்கிச் சோற்றை உண்ணுமாறு கூறுகின்றாள். மகள் மறுப்பது கண்டு அவளைப் பிடித்து உண்பிக்க முயலுகின்றாள். தாய் பிடிக்கவருவதறிந்து மெல்ல ஒடுகின்றாள் தலைவி. செவிலியும் தொடர்ந்து ஒடுகின்றான். ஒடியும் பிடிக்க முடியாமல் இறுதியில் இளைத்து நிற்கின்றாள். முன்றி லின் கண் போடப்பட்டிருக்கும் முல்லைப் பந்தரின் அடி யில் ஒடி நின்ற தலைவி 'உண்ணேன் காண்” என மறுத் துரைத்துவிட்டு ஆடத் தொடங்குகின்றாள்.-இவ் விரண்டையும் ஒருங்கு கண்ட தாய், 'அன்று அறுசுவை உண்டியை அமர்ந்து ஊட்டவும் மறுத்துண்ட இவள், இன்று பொழுதுமறுத் துண்பதற்குத் தலைவனொடு கூடி வாழும் இன்பம் அவ்வளவு சிறந்தது போலும் அன்று யான் உண் என ஏலவும், என் ஏவலை மறுத்துச் சென்று விளையாடிய இவள், இன்று தலைவன் சொல் பிழை யாது,ஒழுகும் ஒழுக்கத்தையும்,அவன் குறிப்பறிந்து பணி யாற்றுதற்கேற்ற அறிவையும் யாண்டுப் பெற்றனளோ? என வியந்து மகிழ்ந்து கூறுகின்றாள்.

'பிரசங்கலந்த வெண்சுவைத் தீம்பால் விரி.கதிர்ப் பொற்கலத் தொருகை யேந்திப் புடைப்பிற் சுற்றும் பூந்தலைச் சிறுகோல்