பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 - காவிரி

உண்ணென் றோக்குபு புடைப்பத் தெண்ணிர் முத்தரிப் பொற்சிலம் பொலிப்பத் தத்துற்று அரிநரைக் கூந்தற் செம்முது செவிலியர் பரிஇமெலிந் தொழியப் பந்தர் ஓடி ஏவன் மறுக்குஞ் சிறுவிளை யாட்டி அறியும் ஒழுக்கமும் யாண்டுணர்ந்தனள் கொல் கொண்ட கொழுநன் குடிவறன் உற்றெனக் கொடுத்த தந்தை கொழுஞ்சோ றுள்ளாள் ஒழுகுநீர் துணங்கறல் போலப் பொழுது மறுத்துண்ணுஞ் சிறுமது கையளே (நற்.11.) இவ்வாறு இல்லறம் ஆற்றும் தலைமக்களுள், தலை மகன் இடையிடையே, பொருள், காவல், கல்வி முதலியன குறித்துப் பிரிந்து போதலும் செய்வன் திறம்புரி கொள்கையொடு இறந்து செயின் அல்லது அரும் பொருள் கூட்டம் இருந்தோர்க்கு இல்' (நற். 252) என்றும், "இசையும் இன்பமும், ஈதலும் மூன்றும் அசை யுடன் இருந்தோர்க்கு அரும்புணர்வுஇல்' (நற். 214) என்றும் கருதிப் பொருளீட்டுதற் பொருட்டுப் பிரிந்து செல்ல நினைக்கும் தலைமகன். என்றும் 'பிரிந்தறியாத் தலைவியையும், அவளைப் பிரிந்து சென்று கொணரும் பொருளினையும் ஒப்பிட்டு நோக்குகின்றான்; நோக்கித், தன் நெஞ்சை விளித்து, 'நெஞ்சே! தலைவியொடுக.டி இல்லில் இருப்போமாயின் தலைவியின் கூட்ட இன்பம் பெறலாமே ஒழியப் பொருள் பெறுதல் இயலாது;தலைவி யைப் பிரிந்து பொருள் சட்டச் செல்வோமாயின் திரண்ட பொருளைப் பெறலாமே ஒழியத்தலைவியைக் கூடி உறை தலால் உளவாம் இன்பத்தைப் பெறுதல் இயலாது; ஆகவே, இவ்விரண்டினையும் ஒப்பு நோக்கின், பொருள் வயிற் பிரியினும், பிரிதலின்றித் தலைவியொடு கூடி மகிழி னும் நல்லதொரு செயலைப் புரிந்தாயே ஆவாய்; ஆயி னும், தலைவியைப் பிரிந்து பெறும்பொருளோ, பொய்கை