பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர். காடு கோவிந்தன் 7

யைப் பயக்கும். இதனை, "தங்குலக் கோதிய தகைசாலணி யினர், இருள்படப் பொதுளிய சுருளிருங் குஞ்சி, மருள் படப் பரப்பிய வொலியன் மாலையர், வடஞ்சுமந் தோங் கிய வளரிள வனமுலைக், கருங்கய னெடுங்கட் காரிகை யாரொடு, இருங்குயி லால வினவண் டியாழ்செய, அரும்பவிழ் வேனில் வந்தது வாரார், காதலர் என்னு மேதகு சிறப்பின், மாதர்ப்பாணி வரியொடு தோன்றக், கோல்வளை மாதே கோலங் கொள்ளாய், காலங் காணாய் கடிதிடித் துரறிக் காரோ வந்தது காதலரேறிய, தேரோ வந்தது செய்வினை முடித்தெனக் காஅர்க்குர வையொடு கருங்கயனெடுங்கட், கோற்றொடி மாதரொடு குடகந்தோன்ற” (சிலப். 26: 107-121)* எனவரும் அடிகளாற்றெளிக.

அவனின்றும் போந்த காவிரி,பலமலைகளின் இடையே சிற்றாறுகள்பல தன்பால் வந்தடைய, மூன்று காவதங் கடந்து மைசூர் நாட்டின் சமநிலத்தை அடைந்து, ஆங்கிலேயரால், பன்முறையும் துரத்தப்பட்டு இறுதியில், இறந்து வீழ்ந்த திப்புசுல்தான்ுடைய தலைநகராகிய பூரீரங்கப்பட்டணத்தை,ஆற்றிடைக்குறை யாக்குகின்றது. அவ்விடத்திலோர் அழகியபொழிலின் நடுவண்,அழகுமிக்கு அமைந்த மகம்மதியர்கோயில் ஒன்று, மைசூர் நாட்டின் பேரரசர்களான, ஐதர் அலி, அவன் மனைவி, அவன்

  • In the famous Jambudwipa .

There are many splendid kingdoms: But, as high above all Mountains Thrones the snowy Mahameru, And as in the flowering forest Blooms the Champaca the sweetest, So is kodagu, a pearl kingdam. Live in it, My friend, and prosper!