பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர். கா. கோவிந்தன் . 115.

ஈண்டு, 'இறப்ப' என எதிர்காலத்தாற் கூறாது "இறந்தனர்" என இறந்த காலத்தாற் கூறினார், இறத்தல் தெளியப்பட்டமையின். தெளிவுப்பொருளில் வரும் எதிர் காலத்தை இறந்த காலத்தாற் கூறல் இலக்கண மரபாம்; என்னை, "வாராக் காலத்து வினைக் சொற் கிளவி, இறப்பினும் நிகழ்வினும் சிறப்பத் தோன்றும், இயற்கையும் தெளிவும் கிளக்குங் காலை' (தொல். சொல். 145) என்பது விதியாகலின் நிற்க, .

போக்கறிந்து வருந்துகின்றாள் தலைவி என உணர்ந்த தலைமகன், அவள்பாற் சென்று மடப்பம் உடையாய், பொன்போலும் ஒளிவீசும் நின் உடல் வனப்பையும், நீல மணிபோலும் கரிய மணம் நாறும் கூந்தலையும், குவளை மலர் போலும் அழகிய மையுண்ட கண்களையும், மூங்கிலையொத்த பருத்த தோள்களையும் கானுந் தொறும் காணுந்தொறும், அறநெறி நின்றார் அடையும் இன்பம் அடைகின்றேன். அன்றியும், பொற்றொடி யணிந்த நம்புதல்வனும் விளையாடும் பருவம் அடைந்து விளையாடத் தொடங்குகின்றான். இந்நிலையில் உங்கள் "இருவரையும் கண்டு கண்டு மகிழ்வதல்லது வேற்றிடம் செல்லேன்; யான் நின்பால் கொண்டுள்ள அன்போ கடலினும் பெரிது; இங்ங்னமாக, யான் எதனை முன்னிட்டுப் பிரியப் போகின்றேன்? பிரியேன், ஆதலின் ஆற்றியிரு' (நற். 166) என்று கூறி ஆற்றி நீங்குகின்றான்.

இவ்வாறு அழிந்த நெஞ்சுடன் மீளும் தலைமகனை, கயாது காரணம்?” என வினவுகின்றான் ஒருவன். அவனை நோக்கித் தலைமகன், 'யான் பொருள்வயிற் பிரிதற் பொருட்டு என் செய்கைகளில் சிறிது விரைவுடையனாய் இருந்தேனாக, அக்குறிப்பால் யான் போதற்குத் துணிந் துள்ளேன் என்பதை அறிந்துகொண்ட தல்ைவி மிகவும் வருந்திக் கண்களில் நீர்கொண்டனள். அதை யான்