பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 காவிரி

அறிந்து, அவளைப் பலவாறு புகழ்ந்து கூறி அழுதற்குரிய காரணத்தை வினவவும், அவள் நாண் மிக உடையளாகி, விடையும் அளிக்காது, யாண்டுப் போகின்றனை” என்று வினவுதலும் செய்யாது, "போகலை' என்று தடுத்தலும் செய்யாது பிரிதலில் ஒரு சிறிதும் விருப்பம் இவள் ஆதலின், மெல்ல மெல்ல என் அருகே வந்து, நெடும் பொழுது எதை எதையோ நினைந்து நின்று, இறுதியில் என் தோளின் மீது சாய்ந்து விட்டாள். அதுகண்டு பொருள்வயிற் பிரியக் கருதிய என் நெஞ்சம், ஈரிய மண் ணால் செய்யப்பட்டு ஈரம் புலராத பசுமட்கலம் மழை நீரை ஏந்த வைத்தால் எவ்வாறு கரைந்து ஒழியுமோ, அதைப்போன்று, தன் விருப்பம் எல்லாம் ஒழிய அவ ளுடன் இரண்டறக் கலந்து வேறுபாடின்றி அடங்கிவிட் ட து' (நற்றிணை, 308) என்று கூறுகின்றான்; х

இவ்வாறு உள்ளம் அடங்கிற்று எனினும், பொருள் இன்மையான் உளவாம் இளிவரவு, தலைமகனைப் பொருள் வயிற் பிரியச் செய்கிறது. அக்காலை, தலை மகன், தலைவியின் இயல்பை நோக்குகின்றான்; அவன் கண்முன், தலைவியின் பேரழகின் தோற்றமும், பிரிவால் வருந்தும் அவள் வருத்த நிலையும் ஒருங்கு தோன்று கின்றன. தோன்றவே, இத்தகைய இயல்புடையாளைப் பிரிந்தாரைத் துன்புறுத்தும் இக்கொடிய வாடைக் காறறிலே தனியாக விட்டு நீங்கிப், பொருள் இன்மையான் வரும் இளிவரவைப் போக்குதற்குப் பொருள் பெறப் பிரிய வேண்டுமாயின் அம்ம அம்ம பொருள் இன்மையான் வரும் அவ்விளிவரவு கொடிது கொடிது!" (நற்.262) என்று வருந்திக் கூறிப் பிரியத் துணிகின்றான். .

துணிந்த தலைமகன், தலைவியோடு கூறிப் பிரிதல் இயலாது எனக் கருதி, தோழிபால் கூறிப் பிரிதலே செயற்பாலது எனக்கொண்டு, தோழியிடம், தன் கருத்தை