பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iபுலவர். கா. கோவிந்தன் - 117

வெளியிடுகின்றான். அது கேட்ட தோழி, உடன்பட்ா ளாய், 'ஐயனே! நிலையற்ற பொருளைப் பெறவிரும்பி, "இதை, வளையணிந்த முன்கையை உடைய நின் தோழிக்கு உணர்த்துவாயாக’ என்று கூறுகின்றனை; அவ்வாறே, யானும் சென்று உணர்த்துகின்றேன். அவளும் நீயிர் செல்வீராக’ எனக் கூறி விடுக்கின்றாள், *ஆனால் அவள் அவ்வாறு விடுப்பினும், செல்வமலிந்த பல் கட்டுகள் அமைந்த மாணிகையின் உட்புறத்தே இருக்கும் அழகிய சிவந்த கால்களை உடைய சேவற்புறா தன்பெடையைக் கூடுதற்கு விரும்பி அழைக்கும் அவ் வொலி கேட்குந்தோறும் வருந்தும் இவளை, இவளுடைய கண்ணையும், துதலையும் தடவிப் பிரிந்து போதற்கு ஏற்ற வன்மை உடையீரோ? உடையீராயின் பிரிந்து செல்க' (நற். எ.க) என்று கூறி மறுக்கின்றாள் மீண்டும், தலைவனை நோக்கித் தலைவ! பொருளிட்டுதற் பொருட்டு வெப்பம் மிக்க, கடத்தற்கரிய வழியில் செல்வது நுமக்கு மிக்க உவகையை அளிப்பதாய் உளது: ஆனால், எம் தலைவிக்கோ எனின், நீயிர் பிரிந்து செல்லு தலைக் கேட்டவுடன், யானைப்படை பல கொண் டுள்ள் பகை வேந்தன் தன் மதிற்புறத்தே தங்கியிருக்கும் காலத்தே, அஞ்சற்க என்று கூறித் துணையாக வந்த அரசன், துணை செய்யாது கைவிட்டுச் சென்றானாக, உடைபட்ட ஒரே மதிலையுடைய அரசனுக்கு நேர்ந்த அழிவு போன்ற அழிவு வாராநின்றது. ஆதலின், இசைந்த தொன்றினைச் செய்வாயாக’என்று கூறி மறுக்கின்றாள்.

"வெம்மை பர்ரிடை பிறத்தல் நுமக்கே மெய்ம்மலி உவகை யாகின்று இவட்கே 'அஞ்சல் என்ற இறைகை விட்டெனிப்

(நம்:43,