பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 - r sirsstast

ஈண்டு, அஞ்சல் எனக் கூறிய துணை அரசன் தலைவ னாகவும், மதிலின் அகத்தே இருக்கும் அரசன் தலைவி மாகவும், உடைமதில் ஒரெயில் பெண்களுக்குரிய குணங் கள் எல்லாம் கழிய எஞ்சி நின்ற நாணாகவும், பகை யரசன் தலைவன் பிரிந்தவுடன் தலைவியைப்பற்றி வருத்தும் பசலை நோயாகவும் கூறப்பட்டுள்ள நயம், கண்டு இன்புறற்பாலதாம். நிற்க;

இவ்வாறெல்லாம் மறுத்துக்கூறிய தோழி, இறுதியில் பொருளின்றி இல்லறம் இனிது நடவாது என்பதை உணர்ந்து பிரிவிற்கு உடன்பட்டுத், "தலைவ! நீயிர் வினை.வயிற் செல்வேன் செல்வேன் என்று கூறுகின்றீர்; தலைவியின் இயல்பை நன்கு அறிந்துள்ளேன். ஆதலின், "நீயிர் செல்வீராக’ என்று கூறுதற்கு அஞ்சுகின்றேன். அவ்வாறன்றி, "செல்வாது ஈண்டே இருப்பீராக’ என்பே னாயின் ஊரார் கூறும் பழிச்சொல் கண்டு அஞ்சுகின் றேன். ஆதலின், சென்மின்; சென்று வினை முடியின்; வினை முடிந்ததாயின் ஆண்டு நில்லாது இவண் வந்து இவளை ஒம்புமின்' (நற். 229) என்று கூறி இசைந்து நிற்கின்றாள். ->

இவ்வாறு இசைந்த தோழி, தலைவிபாற் சென்று தலைவன் பொருள்வயிற் பிரியக் கருதியுள்ளதையும், அதற்குத் தான்் இசைந்து வந்ததையும் கூறுகின்றாள். அது கேட்ட தலைவி முதலில் வருந்துகின்றாள். எனினும் இறுதியில் தலைவன் பொருள் சட்டி வந்தாலொழிய இல்லறம் இனிது நடவாது என்பதை உணர்ந்து, தோழியை நோக்கித் தோழி! பொருள்வயிற் பிரிவேன்" என்று அவர் கூற, அவ்வாறு பிரிதல் நன்று' என்று கூறி உடன்பட்ட நல்லதொரு செயலைச் செய்தாயேயாவாய்; ஆடவர் வினை மேற்கொண்ட உள்ளத்தவராய் பொருள் சிட்டுதற்கு அகல்வர் அஃது அவர்கள் பண்பும் ஆகும்." என்று கூறி உடன்பட்டு ஆற்றிருக்கின்றாள்.