பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர். கா. கோவிந்தன் 121

இவ்வாறு கூறி ஆற்றியிருக்கும் அவள். தலைவன் வாராது மேலும் நீடிப்பது கண்டு வருந்தி அவனையே நினைந்த நெஞ்சினை உடையவளாய்த் தோழியை நோக்கித் தோழி! என் நெஞ்சம் என்னோடு கூடிவாழ் தல் இன்றி, அவர்யால் சென்று அவருடன் இருத்தலின் அது மிகவும் நல்வினை உடைத்த; யானோ, அந்நெஞ்சம். போன்று நல்வினை செய்திலேன் ஆதலின் ஊரார் கூறும் அலர் உரை கேட்டு வருந்தி வாழ்கின்றேன்" (நற். 107) என்று வருந்திக் கூறுகின்றாள். நாள் பலவாகி யும் தலைவன் வரானாக, தன் நெஞ்சம்மட்டில் அவனை மறத்தல் இன்றி இருப்பதையும், தன் நலன் எல்லாம் கெடுவதையும் தோழிக்கு அறிவிப்பாள், 'தோழி! தலைவன்பாற் சென்ற என் உள்ளம், அவர்க் குத் துணையாய் நின்று. வினையை முற்றுவித்து அவரு டன் ஒருங்குவர விரும்பி உளதோ? அன்றி, அவர் அருளாமையால் மீண்டு இவண் வந்து, பிரியுமுன் இருந்த நலம் கெட்டுப் பசலை பாய்ந்த என் உடலைக் கண்டு, 'இவள் நம் தலைவி அல்லள்; அயலிலாட்டி, என்று எண்ணி வருந்தி வேறிடம் சென்றுவிட்டதோ? அறியேன்” என்று வருந்திக் கூறுகின்றாள்.

"சென்ற நெஞ்சம் செய்வினைக் குசாவாய்

ஒருங்குவரல் நசையொடு வருந்துங் கொல்லோ? அருளாத னாதலின் அழிந்து இவண் வந்து . . . . . . தொன்னலன் இழந்தவென் பொன்னிறம் நோக்கி, ஏதி லாட்டி இவளெனப் . . ; போயின்று கொல்லோ நோய்தலை மணந்தே:' - . . (நற்.56),

பிரிந்துறையும் தலைமக்களுக்கு மாலைக் காலமும். மனக்கினிய காட்சிகளும் வருத்தம்,வினைவிப்பனவாம்.