பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 கrவிரி

சோலைகளில் நின்று தன் இனிய குரல் எடுத்துக் கூறு கின்றன குயிலினங்கள்; அக் குரல், தலைவிக்கு, நெடுங் காலத்திற்கு முன்னே உண்டாய புண்ணில் கூரிய வேற் படையைப் பாய்ச்சினாற் போன்ற துன்பத்தைத் தரு கின்றது. தலைமக்கள் கூடி விளையாடுதற்கேற்பப் பளிங்கு போன்று தெளிந்த நீர் நிறைந்து ஒடும் ஆற் றைக் காணுகின்றாள். குயிலின் குரல் கேட்டு அடைந்த துன்பத்தைக் காட்டினும் மிக்க துன்பத்தை அடைகின் றாள். மாலை நேரம் மகளிர் சூடிக்கொள்ளுதற்கேற்பப் பசுமையான குருக்கத்தி மலருடனே விரவிக் கட்டப் பெற்ற சண்பக மலர் மாலையை விலைக்கு விற்று வருகின்றாள் இளமகள் ஒருத்தி, அவளை ஆற்றை வெறுத்தலினும் மிகுதியாக வெறுக்கின்றாள் தலைவி (நற்.97) இந்நிலையில் அவண் வந்த தோழியை நோக்கித் தோழி இம்மாலைக் காலம், இருள் மிக்க இராக்காலத்தே சேறு நிறைந்த தொழுவத்தினின்று நீக்குதலும் செய்யாது அத்தொழுவத்துள் கீழே படுக்க வும் விடாது நின்ற நிலையிலே நிற்குமாறு, தலைக் கயிற்றை இழுத்து உச்சியிலே தூக்கி மேற் கைம் மரத்தில் இறுகப் பிணிக்கப்பெற்ற பசுவின் கன்று வருந்துவதைப் போல, யான் ஒருத்தியாகவே நின்று வருந்த வருத்து கின்றது" (நற். 109) என்று கூறி வருந்துகின்றாள்,

இவ்வாறு வருந்துவாள், தலைவன் சின்னாள் நீட்டிப் பனாயின் தான்் இறப்பது உறுதி எனவும், அவ்வாறுதான்் இறக்குங்காறும் வாராது பொருள் சட்டுவனாயின் அவன் அறிவற்றவன் ஆவன் எனவும் கூறுவாள், "தோழி! தன் எல்லா உறுப்பானும் மருந்தாய் உதவும் மரத்தின் பயனைப் பின்னும் வேண்டிய மக்கள், அது பட்டுப் போகும்படி அதன் பாலுள்ள மருந்து முற்றும் கொள்ளார், மக்கள் தவம் செய்தற்கு நிலைக்களனாய தம் உடல்வலி அனைத்தும் கெடுந்துணையும் தவத்தினைச்