பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துறவு

':ஒரில் நெய்தல் கறங்க, ஒரில்

சர்ந்தண் முழவின் பாணி ததும்ப, புணர்ந்தோர் பூவணி அணிய, பிரிந்தோர் பைதல் உண்கண் பணிவார்பு உறைப்பு, படைத்தோன் மன்ற அப் பண்பி லாளன்; இன்னாது அம்ம! இவ்வுலகம்; இனிய காண்க இதன் இயல்பு உணர்ந்தோரே."

- பக்குடுக்கை கன்கணியார்

இல்லற வாழ்க்கையினை மேற்கொண்ட தலைமக்கள் இருவரும், இல்லற நெறியில் தத்தமக்கு ஒதிய அறநெறி யில் ஒரு சிறிதும் பிறழாது நின்றுபேணி, மனக்கினிய மக்க ளையும் பெற்று வாழ்ந்த அந்நிலையோடு அமையாமல், உயிர், உடல், உடைமை முதலாயின தாம் கண்ட நிலையி லேயே நில்லாது நாளும் அழியும் இயல்புடையனவாய் இருத்தலைக்கண்டு, அவற்றிடத்தே வெறுப்புற்று, என்றும் அழியாததாய், இன்பமே நிறைந்ததாய் உள்ள ஒரு நிலையைப்பெற விரும்பி மேற்கொண்ட நெறியே துறவு நெறியாம். -

இத்துறவு நெறி, உலகில் உள்ள யாவரானும் விரும்பி மேற்கொள்ளப்படுகின்றது. எனினும், அதை மேற்