பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 காவிரி

என்று துறவு மேற்கொள்ள விரும்பிய அரசன் ஒருவனை நோக்கி அவன் அமைச்சன் கூறுவனவற்றானும் அறிக. இதனால், உலகில் வாழும் மக்கள் அனைவரையும், உயர்நிலை உலகம் அடையச் செய்த பின்னர், தாம் அவ்வுலகை அடைதலே நேரிய முறையாம் என்பதும், அஃது இல்வாழ்வார்க்கே இயலுவதொன்றாம் என்பதும் பெறப்படும். படவே, அவ்வில்லற வாழ்க்கையினை மேற்கொள்ளாது, துறவினை மேற்கொள்ளுதல் நெறி யல்லா நெறியாம் என்பது தெளிவாம்.

இளமையில் இன்பத்தை ஊட்டிய உடல் உறுப்புக் கள், முதுமையில் வெறுப்பினை விளைத்தலையும், உரமும், உறுதியும் உடையதாகக் கருதப்பட்ட உடல், உயிர் நீக்கியபின் அழிந்தொழிவதையும், நிலைபேறுட்ை யதாகக் கருதப்பட்ட பொருள், நிலை கலங்கிக் கெடுவதை யும் கண்டாலொழிய, அவற்றிடத்தே வெறுப்பு இயல் பாகத் தோன்றுவதில்லை. காண்பதற்கு இன்பத்தைத் தரும் விளக்கொளியினைக் குழந்தை, தொட முயலுந் தோறும், நாம் அதைத் தடை செய்யின் குழந்தைகளுக்கு அதைத் தொடுதல் வேண்டும் என்று தோன்றிய விருப்பம், குறைவதேயி ல்லை. மாறாகப் பெருகி வளர்கின்றது; ஒரு முறை அவ்விளக்கினைத் தொட்டு, அதன் வெம்மை யால் துன்புற்ற காலத்தேதான்் அதன்பால் வெறுப்பு உண் டர்கின்றது. இதுபோன்றே, இன்பம் தருவன போன்று தோன்றும் உலகப் பொருள்களைப் பெற்று, அவற்றோடு கூடிவாழ்ந்த காலத்தேதான்், அவற்றின் உண்மை இயல்பு-இன்பம் விளைப்பன போன்று, துன்பம் விளைக்கும் இயல்பு - தோன்றி அப்பொருள்களிடத்தே கொண்டிருந்த பற்று ஒழிய வெறுப்புத் தோன்றுமே யல்லாது,அப்பொருள்களைப் பெற்று அவற்றோடு கூடி வாழாத காலத்தே.அப்பொருளிடித்தில் உண்மையிலேயே வெறுப்புத் தோன்றுவது.இல்லை; பற்று அற்று இருக்க