பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 &;nteŵrfl

வகைப்பட்ட கருத்துக்களைத் தோற்றுவிப்பதே அன்றி,

காணுகின்ற ஒருவர் உள்ளத்திலேயே கால வேறுபாட்

டான், வேறுபட்ட கருத்துக்களை தோற்றுவிப்பதும்

உண்டு. ஞாயிற்றின் தோற்றம் என்றும் ஒன்றாகவே

இருப்பினும், அதை இளமையில் காணுங்கால் எழுந்த

உள்ளக் கிளர்ச்சி, அவர்க்கு, முதுமையிலும் அதைக் காணுங்கால் உண்டாதல் இல்லை. மணப்பருவம் எய்தா

நிலையில், காமநோய் என்பது இத்தன்மைத்து என

அறியாளாய்க், காம நோயால் வருந்தும் வாணியை

நோக்கி,

'காதலென் பதுவென்? பூதமோ? பேயோ? வெருட்டினால் நாய்போல் ஓடிடும்; வெருவில், துரத்தும்; குரைக்கும்; தொடரும் வெகுதொலை."

என் வீண் வீரம் பேசிய மனோன்மணி, பின்ன்ர்க் காம நோயுற்று வருந்துங்காலை, "போதம் கரைந்து மேற் பொங்கிடும் அன்பை, பூதயாக்கையோ தடுத்திடும்.' என இரங்கி உரைத்தல், கால வேறுபாட்டான் நிகழ்ந்த அவள் மனவேறுபாட்டை அன்றோ அறிவிக்கின்றது.

அமைச்சன் குடிலன், சூழ்ச்சியால், சேரநாட்டரசன், புருடோத்தமன், பாண்டிநாட்டு மன்னன், சீவகனுடன் போர் தொடுத்து விட்டான். முதல்நாட் போரில் பாண்டிப் படைகள் தோற்று மீண்டன; சீவகனும், பகைவ ரால் கொல்லப்படும் நிலையில் உயிர் மீட்கப்பட்டான்; அரணும் அழிந்துவிட்டது. இந்நிலையால், உளத்துயர் மிக்கான் எனினும்; மறுநாட் போரில் வெற்றி பெற்றோ, அன்றிக் களத்தில் உயிர்விட்டோ, பழி நீங்கிப் புகழ் பெறத் துணிந்துவிட்டான் அரசன். அந்நிலையில் அவன் ஆசிரியர் சுந்தரர் அவண் வருகின்றார். வந்த அவர் அரசனை நோக்கி, "கொக்கொக்க கூம்பும் பருவத்து