பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர்: கா. கோவிந்தன் 135

மற்றதன், குத்தொக்க சீர்த்த விடத்து' என்ற முது மொழிப்படி, தமக்குக் காலமும் இடனும் கருவியும் நன்கு வாயாவழி அடங்கியிருந்து, அவை வாய்த்தவழி வினை யாற்றலே அறிவுடையார் செயல்; ஆதலின், அரணும் ஆற்றல் அற்று, வீரரும் வீறு இழந்து நிற்கும் இக்காலை, ஆண்மையானும், ஆற்றலானும், நின்னினும் சிறந்த நின் பகைவனுடன் போரிடல் நீத்து, அவனுடன் அமைதி பேசிப் பணிந்தொழுகலே நன்று இவ்வாறு இன்று பணிந் தொழுகுவையேல், பின்னர் உயர்வைப் பெறுவாய்,' என்று கூறுகின்றார். இவ்வாறு அறிவுரை கூறும் அவர் உள்ளத்தே, தான்் கூறிய அறிவுரைக்குச் சிறந்த எடுத்துக் காட்டாக விளங்கும் ஒரு காட்சி தோன்றுகிறது. 'பெரு வெள்ளம் பாயும் பேராறு ஒன்று; அதன் கரையில் மூங் கிலும் மரமும் நிறைந்துள்ளன;பெருவெள்ளம் பாயினும், பெருங்காற்று வீசினும், தம்நிலையில் சிறிதும் தாழாது நிற்கின்றன மரங்கள்; ஆனால் மூங்கில்களோ எனின், சிறு வெள்ளம் பாயினும், சிறு காற்று வீசினும், அவற்றிற்கு ஏற்ப வளைந்து கொடுக்கின்றன. இறுதியில், மரங்கள் ஆணிவேரும் அற்று வீழ்ந்து விடுகின்றன; மூங்கில்கள் மட்டும், காற்றும் மழையும் ஒய்ந்த பின்னர்த் தம்நிலை யில் நிமிர்ந்து நிற்கின்றன; இவ்வாறு தான்் கண்ட இக் காட்சியை எடுத்துக் கூறித் தாம் கூறவிரும்பிய கருத் தைக் கூறுகின்றார். 'புயல்போல் வந்துளது போர்; இக் காலை நீ மரம் போல் பணியாது செருக்குற்று நிற்பையேல் நீ நின் கிளையுடன் அழிவது உறுதி. அவ் வாறன்றி, மூங்கில்போல் பணிந்து செல்வையேல் பின்னர் ஒருகால் சிறந்த வாழ்தலும் கூடும்,' என்றனர்.

'வளையும் வேய்நிமிரும்; வளையா நெடுமரம் கிளையுடன் கெடுமே கிளர் காற் றதனால்."

இனி, இதை அமைதியுடன் கேட்ட அரசன் உள்ளம் அக்காட்சியைக் காணும் முறையினைச் சற்று நோக்கு