பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர். கா. கோவிந்தன் - 137

நாளைப் போரிட்டு, வெற்றியோ, அன்றி, இறப்போ பெறுதலே என் கடனாம் எனக் கூறினான்.

"முளையும் ஒர் மரமோ? முனிவ! புல்லினம்!!.

களைகுவர்: களை கிலர் காழ்பெறுந் தருக்கள்; சேணுயர் தேக்கு திசையெறி சூறையில் ஆணிவேருடன் எழுந்து அதிர்ந்து அசைந்து இறினும், பேணுவர் அதனைப் பெரியோர்! யாரே, காணுவர் காழறு நாணமில் நாணலை?”

ஈண்டு ஆசிரியர் சுந்தரரும், அரசன் சீவகனும் கண்ட காட்சி ஒன்றே ஆகவும், அவர்தம் கருத்துக்கேற்ப, வேறு பட்டு விளங்குவது காண்க. காலமும், கருத்தும் இன்மை குறித்துக் கட்டுரையை இம்மட்டில் முடிக்கின்றேன்.

-செந்தமிழ்ச் செல்வி 1952-53 (பக்கம் : 229, 232)