பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எம்மனோர் இல் செம்மலும் உடைத்தே.

பேரொலி செய்யும் பெருங்கடற் கரையில், பால் ஒளி செய்யும் பருமணற் பரப்பு; அம்மணற் பரப்பு முற்றிலும் புன்னை மரங்கள் நன் மலர் மலர்ந்து நீழல் செய்து நிற்கின்றன; அப் புன்னை மரங்களின் நீழல் தோறும், பரதவர் மகளிர் பலர் கூடித், தம் தந்தை, தன்னையர் கொணர்ந்த மீன்களுக்கு உப்பிட்டு உலர்த்தி, அவற்றினை உண்ண வரும் கடற் காக்கைகளை ஒட்டு வதற்கிடையே, மணல் வீடு கட்டியும், கடல் நண்டாட்டி யும், கழங்காடியும் விளையாடல் புரிந்து வாழுகின்றனர். அம்மகளிர் பலருள், கையில் வளையும், காலிற் சிலம்பும் அணிந்து, எழில்மிக்கு, அம் மகளிர் தமக்கு இறைவி யென உள்ளாள் ஒருத்தி மட்டில், முகப் பொலிவு குன்றி, புள்ளோப் புதலாகிய தம் தொழிலையும் செய்யாது, மகளிருடன் கூடி ஆடலும் புரியாது, தன் உயிர்த் தோழி யுடன், அம்மகளிரை விட்டுப் பிரிந்து சென்று தனியே ஒரு மரத்தடியில் வந்து தங்குகின்றாள். தங்கிய அத் தலை மகளின் ஆற்றாமையைக் கண்ட அவள் தோழி; அவள் ஆற்றாமைக்குரிய காரணத்தை அறிய விரும்பு கின்றாள். தலைவி, தனக்கும், அரசன் மகன் ஒருவனுக் கும் உண்டாய அன்பின் பிணைப்பையும், 'பிரியேன்" என்று கூறிய அவன், பிரிந்து சென்றதோடு நில்லாது, நாள் பல வாகியும் வாராதிருப்பதையும் கூறி அறத்தொடு நிற்கின்