பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர். கா. கோவிந்தன் 139

றாள். அது கேட்ட தோழி, பிரிந்து சென்ற தலைவர், விரைவில் வருவார் எனவும். வந்து, தமர் அறிய மணம் புரிந்து தலையளி செய்வர் எனவும், கூறி அவள் ஆற்றா மையைப் போக்கிக் கொண்டு இருக்கின்றாள்.

நாட்டில் உள்ள கடவுளருக்குப் பல்வேறு காலங்களில் விழா எடுப்பது குறித்துக் கட்டப்பெற்ற கொடிகள், அங்காடிகளின் இரு மருங்கும் விளங்குகின்றன; நெல் முதலாய பல்வேறு கூலங்களுள் இன்ன பொருள் இன்ன இடத்தே உளது; அதன் விலை இவ்வளவு என விற்பார் கூறாமல், வாங்குவார் தாமே, அறிந்து கொள்வதற் கேற்ற குறியீடுகளைக் கொண்ட கொடிகள் ஒருபால் நின்று அசைகின்றன; கல்வி, கேள்விகளில் சிறந்த பெரியோர்கள் பலரும் கூடி, ஆராய்ச்சிகளும், சொற் போர்களும் நடத்தும் இடங்களை அறிவிப்பதற்குக் கட்டப் பெற்ற கொடிகள் மற்றொரு பால் தோன்றி விளங்கு கின்றன; தங்கள் அரசன் பகை வேந்தரை வென்று, அவர் தம் அரணைக் கைப்பற்றிய, வெற்றிச் சிறப்பினைக் கொண்டாடுவதற்குக் கட்டப்பெற்ற கொடிகள் நக ரெங்கும் நின்று காட்சி அளிக்கின்றன; கடல் துறைகளில் நிற்கும் நாவாய்களின் பாய் மரங்களின் மீது கட்டப் பெற்று விளங்கும் பல்வேறு நாட்டுக் கொடிகள் கடற்கரை எங்கும் தோன்றி, கடற் காற்றால் அசை கின்றன. -

இத்தகைய பெருஞ் சிறப்பு வாய்ந்த மாநகர், அரசன் ஒருவனுடைய காதல் மகன், மாலைக் காலத்தே மணித்தேர் ஏறி. கடற்கரையை அடைகின்றான்; அடைந் தவன், பரதவர் மகளிர் கூடி விளையாடும் இடத்திற்கு மிகச் சேய்மைக் கண்ணே, தேர் விட்டு இழிந்து அ மகளிரை நடை கொண்டு நாடிச் செல்லுகி அவன் வருவது கண்ட மக்ளிர், நா. இ.