பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 ... ." காவிரி

மெய்யில் ஒருவராக ஒளிந்து கொள்ளுகின்றனர். அம் மகளிர் குழாத்தைக் கூர்ந்து நோக்கிய அரசிளங் குமரன்: ஆண்டுத் தலைவி இல்லாமையை அறிந்து, மேலும் நடக்கத் தொடங்கி, இறுதியில் தலைவியும், அவள் காதல் தோழியும் கூடியிருக்கும் இடத்தை அடைகின் றான். இதுகாறும் தலைவியைத் தனித்துக் கூடியது போன்று இனி இயலாது என்பதையும், மகளிர் பலரும் போன்று ஆண்டே கூடி ஆடல் புரியாது, தலைவியைச் சேர்ந்து வாழும் இயல்பால், தலைவியோடு இருப்பவளே அவள் உயிர்த்தோழி ஆவாள் என்பதையும், இனி, அவள் துணையிருந்தால் அன்றித் தலைவியைப் பெறுதல் இயலாது என்பதையும் அறிந்தவனாய்த் தோழிபால் சென்று, தனக்கும், தலைவிக்கும் உளவாய, நட்புண்மை கூறி, அவளைப் பெறுதற்குத் துணைபுரியுமாறு வேண்டு கின்றான். தோழி, அங்கு மகளிர் பலர் கூடியிருப்பதை யும், கூட்டம் இடையிடையே வாய்க்கப்பெறின், அவன் வரையாது களவிலேயே ஒழுக விரும்புவான் என்பதையும் பிரிந்து நாள் பல சென்று வருதலால், தலைவியின் வருத்தம் மிகுவதையும்,மனத்திடை கொண்டு,தலைவனை நோக்கி,

"ஏ அரசன் மகனே! நின்னால் விரும்பப்பட்டவளாய எம் தலைவி, கடற்கரைச் சோலையிடையே அமைந்த அழகிய சிறு குடில்களில் வாழ்பவரும், நீல நிறம் பொருந்திய பெரிய கடல் கலங்குமாறு கலத்தின் மீது சென்று வலைவீசி, மீன் பிடிப்பவரும் ஆய பரதவருடைய மகளாவாள்; நீயோ, நீண்ட கொடிகள் பல அசையும் அங்காடிகள் நிறைந்த பழமையான ஊரினையும் விரைந்து செல்லும் தேரினையும் உடைய அரசனுடைய காதல் மகன் ஆவை, ஆதலின், நின் செயல், எம் குலக் திற்கே பொருந்துமாறு இல்லை; மேலும், புலால் நாறும்