பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர். கா. கோவிந்தன் - - 141

சுறாமீன்களின் துண்டுகளை உலர்த்திவிட்டு, அவற்றை உண்ண வேண்டி, கூட்டம் கூட்டமாக வரும் கடற் காக்கை முதலாய புள்ளினத்தை ஒட்டும் இழிந்த இயல் பினேமாய எமக்கு, நின்னை ஒத்த அரசரால் செய்யப் படும் நலந்தான்் யாது பயன் அளிக்கவல்லது? புலால் நாறும் மீன் உணக்கும் தொழில் உடைய யாங்களும் புலால் நாறுகின்றேம் ஆதலின், எம் அருகே வராது, சற்று விலகி நிற்பீராக; கடலையே விளை நிலமாகக் கொண்ட எம் சிறிய நல்ல வாழ்க்கை, உம்முடைய உயர்ந்த அரச வாழ்க்கையோடு ஒத்த உயர்வுடையது அன்று; எனினும், எம்போன்ற பரதவர் குடியுள்ளும், நும் போன்ற செல்வ மக்கள் பலர் உளர்.’’ என்று கூறுகின்றாள். -

'இவளே, கானல் நண்ணிய காமர் சிறுகுடி நீனிறப் பெருங்கடல் கலங்க உள்புக்கு மீனெறி பரதவர் மகளே! நீயே, நெடுங்கொடி நுடங்கும் நியமமூதூர்க் கடுந்தேர்ச் செல்வன் காதல் மகனே; நிணச்சுறா வறுத்த வுணக்கல் வேண்டி இனப்புள் ஒப்பும் எமக்கு நலன் எவனோ? புலவு நாறுதும்; செலநின் ஹீமோ, பெருநீர் விளையுள் எம் சிறுநல் வாழ்க்கை, நும்மொடு புரைவதோ அன்றே; எம்மனோர் இல் செம்மலும் உடைத்தே."

நின் களவொழுக்கத்தை எமர் அறியின் நினக்கு ஏதப் பல இழைப்பர் என அச்சுறுத்திக் களவொழுக்கத்தைச் கடிய விரும்புவாள், எமர், கடலையும் கலக்கும் பெரு வன்மையர்' எனவும், நீ இவ்வாறு எங்கள் தலைவியின் நலத்தைக் களவொழுக்கில் நுகர விடாமல் நின்னைத் தடை செய்து அப்புறப் படுத்துவேம் என்பாள் 'மீன்