பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 凸5TG岛f

உணக்கலைக் களவிலே உண்ணவரும் புள்ளோப்பும் தொழில் உடையேம்' எனவும், இவ்வாறு களவொழுக் கில் ஒழுகுவதற்குத் தடையுண்டாவது கண்டு நீ வருந் தினும் நாங்கள் நின்பால் இரக்கம் ஒருசிறிதும் காட்டேம் என்பாள், நாங்கள், இரக்கம் இன்றிச் சுறாமீன்களைத் துண்டித்து உணக்கும் இயல்புடையேம்’ எனவும், இவ்வாறு கூறுவது கண்டு, தலைவன் வருந்திச் செல்வன் என்று அஞ்சி, நீ இவ்வாறு அரசன் மகன் போன்று. வருவதை விட்டுப் புலால் நாறும் எம்மவர் போலவரின் நலமாம் எனவும், அவ்வாறு வரின், எம்மவரும், தம் குலமாதல் அறிந்து நினக்கு எம் தலைவியை மணம் செய்து தருவர் எனவும் கூறுவாள், புலவு நாறுதும்.' "எம்மனோர் இல் செம்மலும் உடைத்தே' எனவும்: ஈண்டு மகளிர் பலர் கூடியுள்ளார். ஆதலின், இவ்விடம் கூட்டத்திற்கு ஏற்ற இடம் அன்று என்பாள். 'செல நின்றீமோ எனவும் கூறிய தோழியின் அறிவாற்றல் அறிந்து மகிழ்தற்குரியதாம்:

-தமிழ்ப் பொழில் : 1945-46 பக்கம் : 276-278