பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோசர்

'தன் ஆட்சிக்குக் கீழ்ப்படியாத, தன் அரசோடு ஒத்த பெருமைவாய்ந்த பேரரசுகளாம்" என மெளரியப் பேரரசன் அசோகனால் சிறப்பித்துக் கூறப்பெற்ற தென்னிந்திய அரச இனங்கள் நான்கனுள் சத்யபுத்ரர் என்னும் இனமும் ஒன்று. இச்சத்யபுத்ரரே காச ராவர் என்று வரலாற்று நூலாசிரியர் பலரும் கருது வர், 'நாலூர்க் கோசர் நன்மொழிபோல' எனவும்,' "வாய்மொழி நிலைஇய சேண்விளங்கு நல்லிசை வளங் கெழு கோசர்’ எனவும், கோசர் வாய்மொழி வழுவாத வர் என்று சங்கநூல்களிலும் அறிவிக்கப்பட்டுள்ளமை யால் போலும் அவர்கள் சத்யபுத்ரர் என அழைக்கப்பட லாயினர். -

கோசர்க்குரிய நாடு துளு நாடு என்று பழந்தமிழ் இல்க்கியம் பகருகிறது. மங்களுரை நடுவிடமாகக் கொண்ட, துளுமொழி வழங்கும் நாடே துளுநாடாம்: என்றும், கேரள நாட்டிற்கும், துளு நாட்டிற்கும் எல்லை

1. K.A.N. Sastri. Cholas: 28; V, A. Smith, Early,

History: 174.

2. குறுந் : 15. 3. அகம்: 205

4. மெய்ம்மலி பெரும்பூட் செம்மற் கோசர்.

தோகைக்காவின் துளுநாடு-அகம் : 15.