பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 காவிரி

யாகச் சந்திரகிரி அமைந்துளது என்றும், அந்நாடே அசோகனால் சத்யபுத்ரர் என அழைக்கப்பெற்ற கோசர் நாடாம் என்றும் வரலாற்று ஆசிரியர் பலரும் முடிவு செய்வர். கோசர், கொங்கிளங் கோசர் (சிலம்பு : உரை பெறு கட்டுரை) என்றும் அழைக்கப்பெறுவதால், அவர் கள் ஆட்சி கொங்கர் நாட்டிலும் ப்ரவியிருந்தது என்று கொள்ளலாம்;'கொங்குநாடு, மேல்கொங்கு நாடும், குடகு மைசூர் பகுதிகளும் அடங்கிய கங்கதேசம்' என்பர் திருது மு. ராகவையங்காரவர்கள்; 'கோவை, தென்சேலம் மாவட்டங்களைக் கொண்ட நாடு" ள்ன்பர் பேராசிரியர் சிமித் அவர்கள். "நான் மொழிக் கோசர் என்றும் இன் னோர் வழங்கப்பெறுவர்; நான்மொழி என்பதற்கு வேறு பொருள் உரைகாரரால் கூறப்படுவ தாயினும், நாமக்கல் சாசனமொன்றால் (Ep. Rep. 11. 1906) காமோழிகாடு எனத் திரிந்து புதியதாக நாடொன்று அறியப்படுகின்றது; அதனால், பண்டு அந்நாடு இக் கோசராட்சிக் குரியதாக யிருந்ததோ என்று கருதக்கூடி யதே' என்ற மு: இராகவையங்கார் கூற்றும் ஈண்டு நினைவுகூரற்பாலது.

இவ்வாறு, கோசர், விந்தியமலைக்குத் தெற்கே மேற்குக் கடற்கரையை அடுத்து உள்ள துளுநாட்டினர் என்பது வரலாற்றுப் பேராசிரியர்களாலும், பழந்தமிழ் இலக்கியங்களாலும் உறுதி செய்யப்பட்டிருப்பவும், 'நம் முன்னோர், வடநாட்டவரை வேறு வேறாகவே பிரித்து

5. K.A.N.Sastri, Cholas: 2T3, V.A. Smith,TEarly

History 396, 402: -

6. சேரன் செங்குட்டுவன்: 110

7. V.A. Smith, Early History:112

சேரன் செங்குட்டுவன். 111.