பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர். கா. கோவிந்தன் 147

ரும் வாழ்ந்தனர் என்பதாம். இஃது உண்மையாயின் இம்மூவரும் தமிழகத்தின் மீது படையெடுக்கின்றனர் என்றால், தமிழ் நாட்டினுள் முதற்கண் படையொடு நுழைவோர், தமிழகத்திற்கு அண்மையில் , தமிழக எல்லைக்கண் இருக்கும் வடுகராக இருத்தல் வேண்டுமே ஒழிய, அவரைக் கடந்து. அவர்க்கும் அப்பால், அவகுக்கும் வடக்கில் வாழ்வோராகிய கோசராக இருத்தல் இயலாது; அது போர்முறையும் ஆகாது; ஆனால், தமிழ்நாட்டினுள் முதற்கண் நுழைந்த படை கோசர் படையே என்று கூறுகிறார் திரு. பிள்ளையவர்கள். இஃது எவ்வாறு பொருந்துமோ அறியோம். மோரியர் தென்னாட்டுப் படையெடுப்பை உரைக்கும் சங்க இலக்கியங்கள், அப் படையெடுப்பில் தூசிப் படையாகச் சென்றது. வடுகர்

படையே எனறு குறிப்பிடுகின்றனவேயன்றி, கோசர் படையைக் குறிப்பிடவில்லை, என்பதையும் நினைவு கூர்ந்து நோக்குக:

துளுநாட்டைத் தமக்குத் தாய் நாடாகக் கொண்டு வாழ்ந்த கோசர், காலம் செல்லச் செல்ல, தாயகத்தின் நீங்கி கிழக்கு நோக்கிச் சென்று வாழத் தொடங்கினர் என்பதற்கான சான்றுகள் சங்க இலக்கியங்களில் காணப் படுகின்றன; ஆதனெழினி என்பானுக்குரிய செல்லூர்க்குக் கிழக்கேயுள்ள நியமம் என்ற ஊர் கோசர்க்கு உரியது என்ற செய்தி அகநானூற்றுச் செய்யுட்களால் அறியப் படுகிறது.1 * ..

3. முரண் மிகு வடுகர் முன்னுற, மோரியர்

தென்திசை மாதிரம் முன்னிய வரற்கு

- - ي بى سدth : 281

1. அகம் : 90, 216.