பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர்: கா. கோவிந்தன் 149

கடிமிளைப் புறவிற் பூத்த முல்லையொடு பல்விளங் கோசர் கண் ணி யயரும்

மல்லல் யாணர்ச் செல்லிக் கோமான் எறிவிடத் துலையாச் செறிபுரை வெள்வேல் ஆதனெழினி அருநிறத் தழுத்திய பெருங் களிற்று எவ்வம் போல." -அகம்: 216

என்ற அறநானூற்றுச் செய்யுட்களைக் காட்டுகின்றார் திரு. பிள்ளையவர்கள். -

கோசர் வாழும் நியமம் என்ற ஊர், செல்லூர்க்குக் கிழக்கே உளது. அக்கோசர் போரில் பட்ட வீரப் புண்ணாலாய வடு நிறை முகத்தினர்; அச்செல்லூர்க்கு அருகே இளங்கோசர் பலர் ஒன்றுகூடி கடலாடு மகளிர் கொய்துதந்த புவிநகக் கொன்றையினையும், கழனி யுழவர் பறித்துப் போட்ட குவளையினையும், காவற் காட்டில் மலர்ந்த முல்லையோடு கலந்து கட்டிய கண்ணி யணிந்து விளையாடுவர்; அச்செல்லூர் ஆதனெழினி என் பானுக்கு உரியது; அவன் களிற்றின்மீதும் வேல் எறியும் வீரம்மிக்கோன்; அவன் எறிந்த வேலேற்ற களிறுகள் பெரிதும் துன்புறும் என்ற இவையே அவ்விருசெய்யுட்கள் அறிவிக்கும் செய்திகளாம்; வேண்டுமானால், கோசர் ஆதனெழினியின் செல்லூர்க்கு அண்மையில் வாழ்ந்தவர் என்றும், ஒருகால், அவர்கள் அவன் அவைக்கள வீரர் களாக இருந்திருத்தலும் கூடும் என்றும் கொள்ளலாமே யன்றி, திரு. பிள்ளையவர்கள் கூறுமாறு, ஆதனெழினி கோசரோடு போரிட்டு இறந்தான்் என்று கொள்வதற் குச் சிறிதும் இடமின்மையினை இப்பாக்களை ஒருமுறை உணர்ந்தாரும் உணர்வர்.

سمے مجسمہKہ

- 2. Jaso." 3. சோர்வரலாறு : 35. கா-10