பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 காவிf

நாடோடி வாழ்க்கையைக் கைவிட்டு நிலைத்த குடி பினராய் வாழத்தொடங்கிய கோசர், உழவுத் தொழி லைத் தமக்குரிய தொழிலாக மேற்கொண்டிருந்தனர்; காட்டை அழித்துப் பண்படுத்தி உழுது பயறு விளைத் திருந்தனர் கோசர். அந்நிலத்தில் அன்னிமிஞரிலி என்பாளு டைய தந்தை மேய்த்துவந்த பசு புகுந்து மேய்ந்து விட்டது; அச்சிறு குற்றத்திற்காகக் கோசர், அவள் தந்தை யின் கண்களை அழித்துச் சிறுமை செய்தனர்; அவர் கொடுஞ்செயல் கண்டு சினம்கொண்ட அன்னிமிஞரிலி, "தந்தையின் கண்களைப் போக்கிய கோசரை அழித்துப் பழி வாங்குவதற்கு முன், கலத்தும் உண்ணேன்; தூய ஆடையும் உடேன்” என்று வஞ்சினம் கூறி, அக்கோசரை அழிக்க வல்லோன், அழுந்துளர்க்கு டையோனாகிய, திதியனே என்பதறிந்து அவனிடம் தன்குறையுரைப்ப,அவ. னும், அவள் பொருட்டுக் கோசரை வென்று, அத்தவறுக் குக் காரணமாய் இருந்தாரைக் கொன்றான். அதுகண்டு அவள் அகமகிழ்ந்தாள் என்ற வரலாற்றைப் பரணர் அறிவிக்கின்றார்."

கோசர் நிலத்தில் விளைந்த பயிரைப் பசு மேய்ந்த சிறு குற்றத்திற்கு அவர்கள் அளித்த தண்டனைக்

1. “பயறு ஆபுக்கென

வாய்மொழித் தந்தையைக் கண்களைந்தருளாது ஊர்முது கோசர் நவைத்த சிறுமையிற் கிலத்து முண்ண்ாள்; வாலிது முடாஅள்; சினத்திற் கொண்ட படிவ மாறாள்; மறங்கெழு தான்ைக் கொற்றக் குறும்பியன் செருவியல் நன்மான் திதியற் குரைத்தவர் இன்னுயிர் செகுப்பக் கண்டு சின் மாறிய அன்னி மிஞ்சிலி.” -அகம் : 262