பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

452 காவிரி

வில்லை என்பதை அச்செய்யுளை ஒருமுறை நோக்கி னாரும் உணர்வர். ஆதலின் திரு. பிள்ளையவர்கள் கூறுவது பொருந்தாமை உணர்க. இதோ அச்செய்யுள் :

  • வெள்வேல்

இளம்பல் கோசர் விளங்குபடை கன்மார், இகலினர் எறிந்த அகலிலை முருக்கின் பெருமாக் கம்பம் போலப் - பொருநர்க்கு உலையா நின்வலன்வாழியவே."

கோசர், சேரர்க்குப் பகைவனும், வேளிர் பலர் பெரும் பொருள் சேர்த்துவைத்துப் பாதுகாத்து வரும் பாழிக்குரியோனுமாகிய நன்னன் என்பானுடைய மாமரத்தை வெட்டித் தம் நாட்டிற்குக் கொண்டு சென்றனர் என்பர் பரணர். நன்னன் தன் தோட்டத் துப் புனல் தந்த பசுங்காய் ஒன்றைத் தின்றதன் தப்பிற் காக ஒரு பெண்ணைக் கொலைபுரிந்தான்் என்றகொடுஞ் செயலைப் பொறாதுபோலும் அப் பெண் கொலைக்குக் காரணமாய அவன் மாமரத்தை வெட்டினர் கோசர்!

நன்னனுக்குரிய பாழிப்பறந்தலையில்,அவன் நண்பன் மிகுதிலி என்பானோடு போரிட்டு, வெளியன் வேண் மான் ஆஅய் எயினன் என்பான் இறந்தான்ாக, அதுகண்டு ஆற்றாது அழுத அவன் உரிமை மகளிர் துயரைப் போக்கியோனும் தன்னைப் பாடிவரும்பாணர் முதலாயி னோர்க்குப் பரிசாக யானை பல அளிக்கும் இயல்புடை

1. புறம்: 1695

2. "நன்னன் .

நறுமாகொன்ற நாட்டிற் போக்கிய . . . ஒன்று மொழிக் கோசர்' -குறுந்: 73

3. அகம்: 203. - * . . .- x