பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#54 காவிரி

தென் ஆர்க்காட்டுக் கோட்டத்தில், ஆத்துார்க் கண வாய்க்கு அண்மையில் உள்ள மோகூராக இருக்கலாம் என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.” என்று திரு. பிள்ளைய வர்கள் கூறுகின்றனர். கோசர்களாலும், பின்னர்ச் சேரன் செங்குட்டுவனாலும் தாக்கப்பெற்ற மோகூர் மன்னனாகிய பழையன், பாண்டியர் படைத்தலைவ னாகிய பழையன் மாறனே ஆதலின், அவன் மோகூர் பாண்டி நாட்டில் யாண்டேனும்; இருத்தல்வேண்டும்; ஆகவே, அம்மோகூர், மதுரைக்கு வடகிழக்கில் உள்ள திருமோகூர் என்ற ஊராக இருக்குமே யன்றிச் சோழர் ஆட்சிக்குட்பட்ட தென் ஆர்க்காடு மாவட்டத்தில் உள்ள மோகூர் அன்று. கோசர், தாக்கிய மோகூரைத் தென் ஆர்க்காடு மாவட்டத்தைச் சேர்ந்த மோகூரைத் தென் ஆர்க்காடு மாவட்டத்தைச் சேர்ந்த மோகூராகக் கொள் ளலாம் என்ற அறிஞர்களோ, 'மோகூர் என்ற பெயரில் பல ஊர்கள் இருப்பதால் கோசர் தாக்கிய மோகூர் எது என்பதை முடிவு செய்வதில் விழிப்பாக இருத்தல்வேண் டும்” என்று எச்சரிப்பதும் காண்க:

பாண்டியன் மறவனாகிய மோகூர்ப் பழையன் என் பானைக் கோசர் தாக்கியதன் முடிவு யாது என்பது அறியப்படவில்லை எனினும் கோசர், பாண்டிய மன்னன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் ஏவல்கேட்கும் வீரராய், அவன் அவைக்களத்தின்கண் விளங்கினர் என்று மதுரைக் காஞ்சி கூறுகிறது; (771-774) தன் படைத்தலைவனோடு போரிட்ட கோசர்தம் போர் வன்மையினை நேரில் கண்டறிந்த பாண்டிய மன்னன், அக் கோசர் தன் படையில் இருப்பது தனக்குப்

2. சோழர் வரலாறு: 36, 3. K.A.N. Sastri Cholas 28: