பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர். கா. கோவிந்தன் - 11

காட்சியைக் காணுதற் பொருட்டு மக்கள் பலர் இவ் வாற்றிடைக் குறைக்குச் செல்வர்.

இத்துருத்தியின் கிழக்கு முனையில், வெள்ளப் பெருக்கு மிக்குவருங்கால் மேட்டுப் பூமியில் பாயவேண்டி யன போக, எஞ்சிய நீரைக் கொள்ளிடத்தில் சேர்ப் பித்தற் பொருட்டு, சிவ சமுத்திரத்தில் கட்டியாங்கு, தமிழர்களால் கட்டப்பெற்ற மற்றுமொரு கற்சிறை ஒன்று, காவிரியில் கட்டப் பெற்றுள்ளது.

இக் கற்சிறையினின்றும் கொள்ளிடம், பல ஊர் களைக் கடந்து சென்று கடைசியில் சிதம்பரத்தின் அருகில் கடலுடன் கலக்கின்றது. காவிரி, ஆறென எண்ணத் தரும் கால் வாய்கள் பல, தன்னினின்றும் பிரிந்து, தென் னிந்தியாவின் நெற்களஞ்சியம் எனப்பெயர்பெறும், தஞ் சாவூர் நாட்டில்பாய்ந்து அதனை வளமுறச் செய்ய, தான்் அந் நாட்டினைக் கடந்து ஓடி, கும்பகோணத்தையும் கடந்து, இரண்டல்லது மூன்று மைல் வரையிலும் சென்று சில பற சிற்றாறுகளாகப் பிரிந்து இறுதியில் கடலுடன் சேர்கின்றது.

இனி, புனிறுதீர் குழவிக் கிலிற்று முலை போலச் சுரந்து வரும் காவிரி, வான் பொய்ப்பினும் தான்் பொய் யாது நீர் மிக்கு வருதலின் இதன்கண், அந்தம் அறியா அருங்கலங்கள் பல என்றும் நின்று நிலவுதலோ டமையாது, இது, தான்் பிறந்த இடத்திலுள்ள பொருள்கள் பல வற்றையும் கொண்டு வருகின்றது. இதனை, "வசையில் புகழ் வயங்குவெண்மீன், திசை திரிந்து தெற்கேகினும், தற்பாடிய தளியுணவிற் புட்டேபம்பப் புயன்மாறி, வான் பொய்ப்பினும் தான்் பொய்யா, மலைத் தலைய கடற் காவிரி' (பட்டி, 1-6.) என்றும், "இலங்கு கதிர் வெள்ளி தென்புலம் படரினும், அந்தண் சாவிரி வந்து கவர்பூட்ட" (புறம். 35) என்றும்,"கங்கைப்பேர் யாற்றினும் காவிரிப்புண்