பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர்: கா. கோவிந்தன் 155

பெருமையும் சிறப்பும் அளிக்கும் செயலாம் என்று கருதி அவ்வாறு கொண்டான் போலும்!

தமிழரசுகளை அழித்துத் தமிழகத்தில் குழப்ப நிலை யைத் தோற்றுவிக்க முயன்ற, தமிழகத்திற்குப் புதியராய கோசரை வென்று, அவர் நாட்டையும் கைப்பற்ற எண்ணினான் கிள்ளி வளவன் என்ற செய்தியை நக்கீரர் அறிவிக்கின்றார்; இவ்வாறு எதிர்ப்பட்டார் எவரையும் தமக்குப் பணியவைத்தன்றி மீள்வதில்லை என்று வஞ்சினம் கூறித் தாக்கும் கோசரை எதிர்த்து ஒட்ட முயற்சித்தவன் கிள்ளி வளவன் ஒருவனே என்று சங்கச் செய்யுட்கள் அறிவிப்பவும், "வடவடுகரான கோசரை இளஞ்சேட் சென்னி என்னும் சோழன் எதிர்த்து வாகை புனைந்தான்்; மேலும் இவன் குறைவினையை முடிப்பதற் காகப் பாழிநகர் வரை பகைவரைத் தொடர்ந்து சென்று வடுகர் தங்கியிருந்த பாழியை எறிந்து, வம்பவடுகர் தலைகளை அறுத்து அழித்தான்்” என்பர் திரு. பிள்ளை யவர்கள்.

அவ்விளஞ்சேட் சென்னி, வடுகரை வென்று, அவர் கைப்பற்றியிருந்த பாழியை எறிந்து சேரநாட்டில் பெரு

... ' வளங்கெழு கோசர் விளங்குபடை நூறி

நிலங்கொள வெஃகிய பொலம்பூட் கிள்ளி ”

-அகம் : 205.

2 " சோழர் பெருமகன்

விளங்குபுகழ் நிறுத்த இளம் பெரும் சென்னி குடிக்கடன் ஆகலின் குறைவினை முடிமார் செம்புறழ் புரிசைப் பாழி நூறி வம்ப வடுகர் பைந்தலை சவட்டிக் கொன்ற யானை' -அகம் : 375.