பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர். கா. கோவிந்தன் 157°

கொண்டிருந்தனர்; இளம் பெரும் சென்னி காலம்வரை: பாழி சோழரால் கைப்பற்றப் பெறவில்லை; ஆகவே, பாழியைக் கைப்பற்றுவதாகிய தம் குடிக்கடன், குறை வினையாக இருப்பதைப் போக்க, இளம் பெருஞ்சென்னி. பாழியை எறிந்தான்்; அப்பொழுது அதைக் கைப்பற்றி ஆங்கிருந்த வடுகர் பைந்தலைகளைச் சவட்டினான் என்பதே. - . .

பழந்தமிழ் இலக்கி யங்களில், மோரியர் தென்னாட்டு படையெடுப்பைப்பற்றிய குறிப்புக்கள் நான்கு இடங்: களில் காணப்படுகின்றன எனினும், அவற்றால் பெறப் படும் விளக்கம்; வடுகர் முன்னுற மோரியர் தெற்கே வந்தனர், கோசர்க்கு மோகூர் பணியாமையின் மோரியர் துணை வந்தனர் என்ற இரண்டே ஆகும். பிற நிகழ்ச்சிகள் பற்றிய குறிப்பே காணப்படவில்லை, மோரியர் செயல் எனத் திரு. பிள்ளையவர்கள் கருதும் கோசர் செயல் களுள்ளும், சேரநாட்டுப் பிட்டங்கொற்றனையும். செல்லூர் வாட்டாறு இவற்றிற்குரிய ஆதன் எழினியையும் வென்றனர் என்பதும், சோழன் இளஞ்சேட் சென்னியால் முறியடிக்கப் பட்டனர் என்பதும் எங்கும், எப்போதும் நிகழாத செயல்களாம் என்பது முன்னரே கூறப் பட்டுளது. இவை நீங்கிய ஏனைய கோசர் செயல்களுள்-நன்னன் நறுமாவைக் கொன்றதுஅகுதையைக் காத்தது-அழுந்துார்த் திதியனால் தண்டிக் கப்பெற்றது-மோகூரைத் தாக்கியது-ஆகிய இச் செயல் களை, இது முடிந்தபின் இது முடிந்தது என்று நிரல் படுத்துக் கூறும் சான்று ஒன்றும் கிடைக்கப்பெறவில்லை. மோரியர் தமிழகத்திற்கு மிகச் சேய்மைக்கண் உள்ளவரே எனினும், அவர்கள் அந்நாட்டின்மீது படையெடுக்க தேர்ப்படையோடு கூடிய பெரும் படையுடன் வருகின்றனர் என்றால், போகுமிடத்தின் இயற்கை யறியாது போகார். தம்மால் அறிய இயலாது போயின்.