பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$53 காவிரி

தமக்குத் துணையாக வரும் தமிழகத்தின் அண்டை நாட்டினராகிய வடுகர் வழியாகவேனும் அறிந்தே போவர் ஆக இவற்றையெல்லாம் நோக்காது, கோசர் செயல் எல்லாம், மோரியர் ஏவலின்படி நிகழ்ந்தன என்று: கொண்டு, "மோரியர் தமிழகத்தின் படை வலிமையையும் இயற்கையமைப்பையும், பிறவற்றையும் அறியாத வட தாட்டினராதலின், மோரியர் துளுவ நாட்டை முதலில் வென்று, சேரநாடு சென்று, பிறகு வாட்டாறு சென்று, பின்னர்ச் சோணாடு அடைந்து, திதியனிடம் தோல்வி யுற்று, பல இடங்களில் வழி தெரியாது திரிந்து, மீண்டும் சோணாடு புக்கு முறியடிக்கப்பட்டனர்' என்று திரு' பிள்ளையவர்கள் முடிவு கட்டிக் கூறுவது ஏற்கத் தக்க தன்று. -

இதுகாறும் கூறியவாற்றான், அசோகனால் சத்ய புத்ரர் என அழைக்கப்பட்டவரே கோசர் அவர் நாடு துளுநாடு; அவர்கள் தமிழகத்தில் புகுந்து, சோழநாட்டில் குடியேறி, உழுதொழில் மேற்கொண்டு வாழ்ந்தனர். ஆதன் எழினி என்பானுக்குரிய செல்லுரர்க்குக் கிழக்கே உள்ள நியமம் என்ற ஊர் அவர்க்கு உரியதாக இருந்தது; நன்னன் நறுமாவைக் கொன்று, அவன் பகைவன் அகுதை என்பானைப் பாதுகாத்தனர். தாம் விளைத்த பயிரை மேய்ந்தது பசு என்பதற்காக, அப்பசுவுக்குரியோன் கண் களைப் போக்கியதனால், அழுந்துார்த் திதியனால் அழிக்கப் பெற்றனர்; தமக்குப் பணியாத மோகூர் மன்னனை மோரியர் துணைகொண்டு தாக்கினர்; இறுதி வில் பாண்டியன் படைவீரராகத் தொழிலாற்றினர்; இவை கோசர் வரலாறாம் என்பதும், அவர்கள் வாய்மை வழுவாத பெருவீரர்களாம் என்பதும் உரைக்கப்பட்டன.

-செந்தமிழ்ச் செல்வி : 1952-53 பக்கம் : 45