பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 காவிரி

மனிதனை, உணவு, உழவு இவற்றின் இன்றியமையாமை யினை நன்கு உணரச் செய்து விட்டன; மக்கள் இன்று பெற்ற இவ்வுணர்வைத் தமிழர்கள், பலநூறு ஆண்டு களுக்கு முன்னரே உணர்ந்திருந்தனர்; அக்காலத்திய நிலத்தின்தன்மை, அதன் அளவு, உழவுமுறை, அதற்கு இன்றியமையா நீர்தருவழி வகைகள், அந்நிலத்தின் விளைவாற்றல் ஆகியவற்றைப்பற்றித் தெளிவான குறிப்புக்கள் காணப்படாது போயினும், அவர்கள், உழவைப்பற்றி அறிய வேண்டுவனவற்றை, மிகவும் தெளி வாக அறிந்தே இருந்தனர் என்பதற்கு வேண்டிய அகச் சான்றுகள் பல, சங்கநூல்களிலும் பிற நூல்களிலும் பரந்து கிடக்கின்றன.

இந்த உடலைப்பற்றிப் பேசும்போதெல்லாம், "சோற்றாலடித்த சுவர், "உணவின் பிண்டம்' என்றே: அதற்குப் பெயரிட்டு அழைத்து, உணவு, உடலும் உயிரும் கூடிவாழ உறுதுணை புரிகின்றது என்ற உண்மையை உலகறியக் கூறினர்: "மண்திணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே' என்று உணவின் சிறப்பினை எடுத்து விளக்கினார் மணிமேகலை நூலாசிரியர்; நாட்டின் இயல்பைப் பற்றிக் கூறவந்த திருவள்ளுவர், தள்ளா விளையுளும் என முதற்கண், என்றும் குறையாத விளையுள் இருப்பதே நல்ல நாட்டிற்குப் பண்பாகும் என்று கூறினார். பிற நாடு களானும் விரும்பத்தக்க பெருவளம் உடையதே நாடு; அவ்வாறு விரும்பிய நாடுகள், தன்பால் வந்தால், அவற் றிற்கு வேண்டும் உணவு முதலியவற்றைத் தந்து தாங்கும் வளம்மிக வுடையதே நாடு வளம் குறைந்தால் பசி மிகும்; பசி மிகுந்தால் பிணி மிகும்; ஆதலின், பிணியும், அதற்குக் காரணமாய பசியும் இல்லாமல் நீங்கவேண்டின், அந்நாட் ஆல் வளம் பெருகுதல் வேண்டும்; அத்தகைய பெரு வளத்தை, அந்நாடு பெற வேண்டுமாயின், அந்நாட்டின்