பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர். கா. கோவிந்தன் 163.

வழிகளில் காணத் தொடங்கினர்; காண முற்பட்டார், அந் நீருணவு, ஆறு, ஊற்று, குளம், கிணறு ஆகிய இவ்

விடங்களில் கிடைக்கும் என்பதையும், அவ் ஆறு, நீர்

அறாமல் ஓடவேண்டுமாயின், அவ்வாற்றின் தோற்றம், பெருமலைக் கண்ணதாதல் வேண்டும் என்பதையும்

உணர்ந்து, 'இருபுனலும், வாய்ந்த மலையும், வருபுன: லும்” ஒரு நாட்டிற்கு இன்றியமையா உறுப்புக்களாம்

என்றும் கூறினர். ஆறு, ஊற்று, குளம், கிணறு ஆகியவற்

றுள்ளும், தோண்டிய குளம், கிணறுகளே பெரிதும் குறை

யாது நின்று பயனளிக்கும் என்பதையும் உணர்ந்து, குளம்

தோண்டுவதை வரவேற்றனர்; தோண்டியவரை வாழ்த்

தினர், 'குளம் தொட்டு வளம் பெருக்கி” வல்லே,

நிலனெளி மருங்கின் நீர்நிலை பெருகத் தட்டோர் அம்ம1

இவண் தட்டோரே; தள்ளாதோர், இவண் தள்ளா

தோரே; இவை அவ் வாழ்த்துரைகளுள் சில.

நிலவளமும், நீர்வளமும் பெற்றிருந்தாலும், அவ் விரண்டையும் பயன்படுத் தித் தொழிலாற்றும் குடிவளம் இல்லையாயின், அவற்றால் பயனில்லை என்பதை உணர்ந்து, உழவுத் தொழிலையும், அத்தொழிலை மேற் கொள்ளும் உழவரையும் இழித்துக் கூறும் இன்று போலாது, அத்தொழிலையும், அத்தொழில் மேற் கொண்டாரையும் பெரிதும் புகழ்ந்து வந்தனர்; மேழிச் செல்வம் கோழைபடாது: “தொழுது உண் சுவையின், உழுது உண் இனிது: "சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்,' “உழுவார் உலகத்தார்க்கு ஆணி;” “உழுதுண்டு வாழ் வாரே வாழ்வார்; இரப்போர் சுற்றமும், புரப்போர் கொற்றமும், உழவிடை விளைப்போர்; இவை, அத் தொழிலையும், அஃதுடையாரையும் பாராட்டிய பாராட்டுரைகள். - , -

உழவுத் தொழுலைப் பேணி வளர்த்து, அதனால் பெருவளம் பெற்றநிாடு, மற்றெல்லா நாடுகளையும்,