பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர். கா. கோவிந்தன் 165.

அவன் பணிந்திலன்; அவன் பணியாமைக்குரிய காரணத் தைப் புலவர், அவன் நண்பர், கபிலர் விளக்குகிறார்: பாரியின் பறம்பு மலை, உழவர் உழாமலே, விளையும் நால்வகை உணவுப் பொருள்களையும் உடையது; ஒன்று மூங்கில் நெல்; இரண்டு, தீஞ்சுளைப் பலா போன்ற பழவகைகள்; மூன்று, வள்ளிபோன்ற கிழங்கு வகைகள்; நான்கு, இயற்கையில் பெறும் தேன் வகைகள் இவற். றுடன், வற்றாத நீர்நிறைந்த சுனைகள் பல; அம்மலை நிறைய உள்ளன; பெருபடை உடையராயினும், பாரியை வெல்லுதல் இயலாது என்று கூறினார்:

அளிதோ தான்ே பாரியது பறம்பே' நளிகொள் முரசின் மூவிரும் முற்றினும், உழவர் உழாதன நான்கு பயன் உடைத்தே; ஒன்றே, சிறியிலை வெதிரின் நெல்விளையும் மே; இரண்டே, தீஞ்சுளைப்பலவின் பழம் ஊழ்க்கும் மே: மூன்றே, கொழுங்கொடி வள்ளிக்கிழங்கு வீழ்கும்மே நான்கே அணிநிற ஒரிபாய்தலின், மீதழிந்து திணிநெடுங் கன்றம் தேன் சொரியும் மே;

  • 蔡**啤领建*参珍é舜 &*●喀 砂 في ه ه هي جه ه فيضمه * جة 9 ه ج م ج - ج ه هو ه ج به

தாளிர் கொள்ளவிர்; வாளிற் றாரவன்;

இவ்வாறு, உழவின் பெருமை யுணர்ந்த முன்னோர், 'அகல வுழுவதினும் ஆழ உழவேண்டும்'; காற்று உட் புகும் அளவு, உழுத புழுதி உலற வேண்டும்; நிலத்தின் உரம் பெருக நிறைய எருப் போடுதல் வேண்டும்; உழுது, எருவிட்டு விதைத்தபின், குறையாமல் நீர்பாய்ச்சுதல் வேண்டும்; விளையும் பயிருக்கு ஊறு செய்யும் களை களைக் கண்டிப்பாக அகற்றவேண்டும்; வளரும் பயிரைப் பிறவுயிர்வகைகள் அழிக்காவண்ணம் காத்தல் வேண்டும் என்பனபோன்ற உழவுத் தொழில்பற்றிய அடிப்படை

ғsлг–~11