பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 காவிரி

முதற்காரணமானவர் அம்மூவேந்தர்கள், மொழியை முன்னிறுத்தி, ஒற்றுமை உள்ளம் கொண்டு, உலகாள் வதற்கு மாறாகச் சேரர், சோழர், பாண்டியர் என்ற குலப் பெருமையே குறிக்கோளாய் நின்று, ஒற்றுமையைக் குலைத்து வேற்றுமையை வளர்த்து வந்தனர். மூவேந்தர் குலத்தில் பிறந்த ஒவ்வொருவரும் பிறரை அடக்கி, ஆள வேண்டும் என்ற எண்ணத்தோடு பிறந்தனர். ஒரு குலத் தில் ஒரு காலத்தில் ஆற்றல் மிக்க அரசன் ஒருவன் பிறந்து விட்டால், அவன் பிற இரு குலத்து அரசர்களையும் வென்று அடக்கி, அரசர்க்கு அரசனாய் வாழ, ஆசை கொள்வதும், அவன் பெருமை கண்டு மனம் பொறுக்க மாட்டாத பிற இரு குலத்து அரசர்களும் ஒன்றுபட்டுப் பிற குறுநிலத் தலைவர்களின் துணையையும் பெற்று, அவனை அழிக்க முனைவதும், அக்கால அரசியலின் அழிக்க முடியாத வழங்கங்களாகி விட்டன! அம்மட்டோ? ஒரு குலத்தவர் பிற குலத்தவரோடு போரிட்ட நிலையோடு நின்றுவிட வில்லை. ஒரு குலத்தில் பிறந்தவர்களுக்குள் ளேயே ஒருவர், ஒருவரோடு போரிட்டுக் கொள்ளவும், மகன் தன்னைப் பெற்ற தந்தை மீது போருக்கு எழவும், தந்தை தான்் பெற்ற மகனையே போரிட்டு அழிக்கவும். அக்காலத் தமிழ் அரசர்கள்-போர் வெறிப் பிடித்துத் திரிந்தனர். அப்போர் வெறியின் விளைவே, தமிழகத்தின்

சீர்குலைவு.

அச்சீர்குலைவைத் தடுத்து நிறுத்தும் முயற்சி அன்றே மேற்கொள்ளப்பட்டது; நாடழிவு தடுக்கப்படவேண்டு மாயின், போர் தடுக்கப்பட வேண்டும்; போர் தடுக்கப் படவேண்டுமாயின், வேந்தர்களிடையே நிலவும் அவ்வேறு பாட்டுணர்வு அகன்று, ஒற்றுமை உணர்வு உயிர்ப் பெறல் வேண்டும் என்பதை உணர்ந்த அக்கால ஆன்றோர் பலரும், அவ்வேந்தர்களுக்கு ஒருமைப் பாட்டுணர்வை, வாய்க்கும் போதெல்லாம் எடுத்துக் கூறிவந்துள்ளனர்.