பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

370 - காவிரி

போல இணைந்து வாழ்வீர்களாக" என்று வாழ்த்தி ஒருமைப் பாட்டிற்கு அன்றே வழி வகுத்துள்ளார்

'இன்னி ராகவின் இனியவும் உளவோ? இன்னுங்கேண்மினும் இசை வாழியவே ஒருவீர் ஒருவீர்க்கு ஆற்றுதி; ரிருவிரும் உடனிலை திரியீ ராயின், இமிழ் திரைப பெளவம் உடுத்துஇப் பயங்கெழு மாநிலம் கையகப் படுவது பொய்யா காதே; அதனால், நல்ல போலவும், நயவ போலவும் தொல்லோர் சென்ற நெறிய போலவும் காதல் நெஞ்சின்றும் இடைபுகற்கு அலமரும் எதின் மாக்கள் பொது மொழிகொள்ளது இன்றே போல் கதும் "புணர்ச்சி.”

ஒருவர்க்கு ஒருவர் துணையாக இன்றே போல் என்றும் ஒன்றி வாழுகிகள் என்று அன்று கூறிய அறவுரை; இன்றும் இன்றியமையாது தேவைப்படுவதாக உளது, வடவேங்கடம் தென்குமரி ஆகிய அவ்வெல்லைக்குட்பட்ட தமிழகத்தில் வாழ்ந்திருந்த, தமிழரசர்கள் எவ்வாறு ஒற்றுமை உணர்வு இழந்து வேற்றுமையுணர்வில் திளைத் துத் தமிழக வாழ்வில் தாழ் நிலையை உண்டாக்கி விட்டார்களோ, அதைப் போலவே, இமயம் முதல் குமரி வரையான, இந்தியப் பெருநாட்டில் வாழ்ந்திருந்த அரசர்களும் மொழியாலும் இனத்தாலும், சாதியாலும் சமயத்தாலும் வேறுபட்டு, காலமெல்லாம் போர் செய்து வத்த காரணத்தால் நாடு, பல அந்நியப் படையெடுப்பு களுக்கு உள்ளாகிப் பல நூறு ஆண்டுகள் அடிமை நாடாகி அழிவுற்றது.