பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 காவிரி:

மிடையேதான்் ஒருமைப் பாட்டினைக் கண்டார். காந்தியார்:

வேற்றுமைக்கு வித்தாக அமைந்தது எது?

ஒரே இனத்தவர் பகைக்கின்றனர். வேறுபட்ட இனத். தவர் கூடி வாழ்கின்றனர். ஒரே மொழி பேசுவோரில் வேறுபடுகின்றனர். பல மொழி பேசுவோர் ஒன்றுபடு கின்றனர். ஒரே கடவுளை வணங்குவோர் பகைக் கின்றனர்-பல சமயத்தவர் கலந்து வாழ்கின்றனர்.

மக்களிடையே ஒற்றுமையை உண்டாக்க, இனம், மொழி, மதம் இவற்றின் ஒற்றுமை மட்டும் போதாது. உண்மையான ஒற்றுமையை உண்டாக்க, இவற்றின் ஒற்றுமையால் மட்டும் ஆகாது; உண்மையான ஒற்றுமையை உண்டாக்குவனவும் அவை அல்ல, அதை, உண்டாக்குவதே வேறு ஒன்றே; அது எது?

அது போலவே, இன வேற்றுமை, மொழி வேற்றுமை, மத வேற்றுமை இருப்பதினாலேயே அவற்றை மேற் கொண்ட மக்களிடையே வேற்றுமை வளர்ந்து விடும். என்பதும் உண்மையாகாது. அவ்வேற்றுமை இருக்கும் மக்கள் இடையேயும் ஒற்றுமையை உண்டாக்கும் ஆற்றல் ஒன்றிற்கு உண்டு. அது எது?

அண்ணனும், தம்பியும், ஒரே தாயிடத்தில் பிறக் கின்றனர்; ஒரே மொழி பேசுகின்றனர்; ஒரே கடவுளை வணங்குகின்றனர். இன ஒற்றுமை, மொழி ஒற்றுமை, மதவொற்றுமை, அவ்வளவும் அவர்களிடத்தில் உள என்றாலும், அண்ணன் தம்பிகள் சண்டை அன்றாட நிகழ்ச்சியாகி விடக் காண்கிறோம். இன ஒற்றுமை அவர் தளிடையே ஒருமைப் பாட்டினை உண்டாக்கவில்லை.