பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 - காவிரி

முஸ்லீம் என்ற மத வேற்றுமையோ, நாம் ஒன்று படடதைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. வேறுபாடு களையெல்லாம் மறந்து நம்மை ஒன்றுபடச் செய்தது எது?

அந்நியன் ஆளுகிறான். நாம் அடிமை, இனத்தால், மொழியால், மதத்தால் நாம் வேறு வேறு என்றாலும் பொருள்நிலையில்-அரசியலால் அடிமைப்பட்டுள்ளோம். பொருள் நிலையால் வறுமைப் பட்டிருக்கிறோம் என்ப தில் நம்மிடையே ஒருமைப்பாடு இருந்தது. அந்த ஒருமைப் பாடு நம்மிடையே இருந்த வேறுபாடுகளையெல்லாம், மறக்கப்பண்ணி ஒன்றுபடச் செய்தது. பொருள், ஒருமைப் பாட்டிற்குக் காரணமாக இருந்தது.

ஒருமைப்பாட்டின் அடிப்படை

ஆகவே, மக்களிடையே ஒற்றுமைகளை உருவாக்குவது உண்மையில், இனமோ, மொழியோ, மதமோ அன்று மாறாகப் பொருள், பொருள், பொருள் ஒன்றே.

பொருளால் ஒரே நிலையில் உள்ளவர்கள் ஒன்று படுவர். அப்பொருள் நிலையால் ஏற்றத் தாழ்வு உள்ள மக்கள் வேறுபடுவர். இதுதான்் உண்மை.

இந்தியா உரிமை பெற்றுவிட்டது. ஆனால் பெற்றது. அரசியல் உரிமை ஒன்றே. வெறும் அரசியல் உரிமையால் மட்டும் ஒரு நாட்டிற்கு வாழ்வு வந்துவிடாது அரசியல் உரிமையை அடுத்துப் பொருளாதார உரிமையையும் பெற்றால்தான்், நாட்டில் வளம் பெருகும்; அந்த உரிமையை இந்தியா இன்னமும் அடையவில்லை. அதை அடைய, நாட்டு மக்கள் ஆற்ற வேண்டிய பணிகள் எவ்வளவோ உள்ளன. -