பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருங்காற்றும், மின்னலும், இடியும்

பெருங்காற்றும், மின்னலும், இடியும் வெயிற்காலத்து யாவரும் கண்டதிசயிக்கும், கானல், பூகம்பம், சூறாவளி போன்ற இயற்கைத் தோற்றங்களின் பாற்படும். பெரு வலியும், பெருஞ்செயலு முடைய வாய் உலகிடைத் தோன்றும் இவற்றிற்குத் தோற்றக் காரணமும், தோற்றத் திற்குரிய முறைமையும் உண்டென்பதை, உல கிடையுல வும் ஒவ்வொருபொருட்கும் தோற்றக் காரணம் உண்டு

என்பதைத் துணிந்த யாவரும் உணர்வர். .

குடுமிகுந்த நாடுகளில், மழைதோன்றும் பொழுதெல் லாம், மின்னலும், இடியும் உடன் தோன்றுதல் இயற்கை. தென்னமரிக்காவில், பூ நடுவரையின் (Equator) அருகி லுள்ள ஊர்களில், நுண்ணிய ஒலி (Sound) யினையும் விரைவில் உணரும் பொறி (Machine or tool) யுடையார் யாவரும், தம்மைச்சூழ்ந்து நிற்கும் காற்றிடையே, எஞ் -ஞான்றும் இடியோசை யுண்மையை யுணர்வர்' என பாசிங்கால்ட் (Boussingault) என்பார் கூறுகின்றனர்.

ஆப்பிரிக்காவில் உள்ள அபிளiனியா நாட்டில் தாம் வதிந்த நான்கு ஆண்டைய எல்லைக்குள், ஏறக்குறைய 1900 இடியோடு கூடிய புயல் நிகழக் கண்டதாகவும், அவைதான்ும், கோடை காலத்தே, நாட்காலித்து நண்