பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

** 6 - காவிரி

வெடிகளைக் கிளப்பிய வண்ணமே இறங்கி வந்தனர்: வரவர, வெடியோசையின் எதிரொலியும் குறைந்து வரலாயிற்று. - .

நிலப்பரப்பின் மேல் இயங்கும். வளியில், குளிர்ந் .தனவும், வெப்பவுமாகிய காற்றுக்கள் தம்மிற் கலந்து இயங்குங்கால், மின்னும், இடியும் தோன்றுகின்றன. வேனிற்காலத்து வெயிலவிர்பகலில், தட்பமும், வெப்பமு முடைய, காற்றுக்கள் தம்மொடு தாம் தாக்குண்டு, இயங்குகையில், தண்கால், வெப்பமுற்று, நெகிழ்ந்து பரந்தோடும் சுடுகாலுள்:துழைந்து,வழி செய்து விரைந்து போதர முயலுகின்று.ழி வெம்மையும், தண்மையும் முரணுவனவாய், இம் மின்னலும், இடியும் எழுகின்றன.

இயற்கையில் நிகழும் ஒவ்வொரு பெருஞ் செயற்கும், முன்னம் உணர்த்தும் முன்னிலைகள் பல உள. புயல் நிகழ்வதற்கு முன்னர், வளி நிலை காட்டி (Barometer) தன் கண் நிற்கும் பாதரசவுயர்வு குறைந்து காட்டுமென்று, கூபிரஞ்சுக்காரர் முன்னரே யுணர்ந்துளர். .

மின்னலும், இடியும் மக்கள் வாழும் கட்டிடங்களைத் தாக்கியழிச காவகை இடிகவர் பொறிகளும், மின்னுக்கவர் குற்றியும் அறிஞர்கள் ஆக்கியுளர். கடற்கட் செல்லும், கலங்களினும் இக்கருவிகள் இருத்தலின், மின்னுப்பொழி மேகம், மேல் வந்து நிற்கிலென்? கடுந் திறல் இடியேறு கடுத்துப் போந்து இடிக்கிலன்? அறிவுத் துணையால் ஆவன செய்து கொண்டேமுக்கு அவற்றால் ஆம் தீங் "கொன்று மில்லையென்க.

-தமிழ்ப் பொழில் 1936-37 பக்கம் : 141