பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 காவிரி

யினது கூரிய மொட்டுக்கள் தோன்றவும், தேற்றாமரத் தின் மொட்டுக்களோடு, பசிய அடி மரத்தினையுடைய கொன்றையின் மெல்லிய மொட்டுக்கள் கட்டவிழ்ந்து மலரவும், இரும்பை முருக்கினா லொத்த, கரிய பெரிய மருப்பினையுடைய மான், பரல்படு குழிகள்தோறும் துள்ளியோடவும், இடமகன்ற ஞாலம், நீர் பெறாததி னால் உண்டாய வருத்தம் நீங்கவும், திருவில், மின், இடி போன்ற தொகுதி கொண்ட மேகம், அழகுபெற்ற கானகத்தில், விரைந்த மழைத்துளிகளைப் பெய்து கார்ப் பருவம் செய்தது: ஆதவின் சிறு மலை நாடானாகிய நம் தல்ைவன், பூக்கள் நிறைந்த புதரின்கண் தத்தம் துணையொடுவதிந்து தாது தேர்ந்து உண்ணும் வண்டு கள், தன் தேரிற்கட்டிய மணியொலி கேட்டு வெருவு. மென்றஞ்சி, அம்மணிநா அசைந்து ஒலியாவண்ணம், கட்டிய மாட்சியினையுடைய, வினை மேற்சென்ற தேரினையுடையவனாய், வளைந்த தலையாட்டத்தாற் பொலிந்த கொய்யப்பட்ட உளை மயிரினையுடைய குதிரையினது.வளைந்த வாய்வார் நரம்பு ஆர்த்ததுபோல் ஒலிப்ப, மிக்க விரைவாக நினது உயர்ந்த நலத்தை நினைந்து தோன்றுவான்; நீ வருந்தற்க. எ-று,

ஒடு, அதனோடியைந்த ஒருவினைக்கிளவி, பிணி யவிழ்த்தல் வினை, இல்லம், கொன்றையென்ற இரண் டற்கும் ஒத்த லின், இல்லம், முதலிற் கூறும் சினை யறி கிளவி. இரும்பு திரித்தாலன்ன என்றும், நாம் பார்த்தா லன்ன என்றும் வரற்பாலன, "இரும்பு திரித்தன்ன;" என்றும், "நாம் பார்த்தன்ன” என்றும் வந்தன; 'துறந் தார் பெருமை துணைக்கூறின் வையத் திறந்தாரை யெண்ணிக்கொண் டற்று” (குறள். 22) என்புழிப்போல மா, கருமை; இரு, பெருமை. அவலடையஅவல் தோறும், கருவி வானம்; தொகுதி கொண்ட மேகம். "கருவி