பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

?2 காவிரி

அரிவையெனவே, அவர் பிரிந்தது சேய்த்தன்று என்பதும் கூறினாள். இனி, பேராசிரியர், இச்செய்யுளை, நோக் கென்னும் உறுப்படங்கிய செய்யுளிற்காக மேற்கோளாகக் காட்டி, விழுமியதோர் உரையும் வகுக்கின்றார் அதனைப் பொருளதிகார4 16-ஆம் சூத்திரத்துட் காண்க

கார்ப்பருவம் எய்தினமையைத் தெளித்தற்பொருட்டு கார்ப் பருவ நிகழ்ச்சிகளைப் பலவாக எடுத்துக் காட்டு வாள், தலைவன் இத்தகையன் ஆதலின், வாராது நிற்பா னல்லன் வருவன் என்பதை வற்புறுத்துதற்காக, "துணை யொடு வதியும். தாதுண் பறவை பேதுறலஞ்சி, மணிநா வார்த்த மாண்வினைத்தோன்' என்று கூறினாள்.

முன்பே நெஞ்சகத் தன்புடைய நம் தலைவர், தாம் வருகின்ற வழியில், வண்டுகள் தம்முள் கூடி நுகரும் இன்பத்திற்கு இடையூறு செய்யக் கருதாராய், தேரிற் கட்டிய மணிநா அசையாவண்ணம் யாத்து வருகின்றார்: அத்தகையார் நின்னைப் பிரிந்து நெடுநாள் உறையார் விரைவில் வருவார் என்று வற்புறுத்தியவாறு காண்க: இவ்வாறு கூறுதல் மரபாதலை,"அன்புறு தருந விறைச்சி யுட் சுட்டலும், வன்புறையாகும் வருந்தியபொழுதே' (தொல். பொருண். 231) என்ற சூத்திரத்தாலும் அதற்கு நச்சினார்க்கினியர் எழுதிய உரையானும் உணர்க.

- இனி இப்பதிப்பில் கொண்டாங்கு, "துணையொடு வதிந்த தாதுண் பறவை” எனக் கொள்ளின், இறந்த காலப் பெயரெச்சமாய், முன்னொரு காலத்துத் துணையொடு வதிந்த வண்டு எனப் பொருள்படுதலின், தலைவன் வருவுழி வதியவில்லையெனப் பொருள்பட்டு செய்யுளின் இயற்கை நலம் கெட்டு, வற்புறுத்து தற்கேற்ற (தோர் சொல்லின்றாகி விடுதல் காண்க. ஆதலின்,