பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர். கா. கோவிந்தன் 23

அதனைத் 'துணையொடு வதியும்" என்றேனும் "துணை யொடு வதிந்து' என்றேனும் கொள்ளின், பொருந்தும் என்க. செய்யுள் இலக்கண வரம்பிகவாமையும் காண்க. இனி, பேராசிரியர்,

"மாத்திரை முதலா வடிநிலை காறு நோக்குதற் காரண நோக்கெனப் படுமே”

- (தொல். பொருள் 416)

என்ற சூத்திரத்தின்கீழ், நோக்கென்னும் உறுப்பமைந்த பாட்டிற்கு உதாரணமாக, இதனைக் காட்டி இதற்கு ஒர் அரிய உரையும் வகுப்பாராயினர். இரண்டாம் பதிப்பை ஆராய்ந்து திருத்திய, பிரம்மபுரீ வே. துரைசாமி ஐயர் அவர்கள், பேராசிரியர் எழுதிய உரையாகிய "துணை யொடு வதியும் தாதுண் பறவை” எனவே, பிரிவஞ்சி, என்ற வாறு என்ற வாக்கியத்தைத் தடித்த எழுத்தால் பதிப் பித்து, அதற்கு முற்பக்கத்திலேயே," துணையோடு வதிந்த தாதுண் பறவை எனப் பதிப்பாராயினர். இச்சிறு ஆராய்ச்சியும் செய்ய ஆற்றல் வாய்க்கப்பெறாத ஐயர் அவர்கள் போன்றார், தொல்காப்பியம் போன்ற பேரிலக்கியங்களைப் பதிப்பிப்பதற்கு எவ்வாற்றானும் உரியரல்லர் என்க.

மஹாமஹோபாத்யாய, பிரம்மபூரீ டாக்டர் உ.வே. சாமிநாதையரவர்களும், சிந்தாமணி 892, 893-ஆம் செய்யுட்களின் உரையுள் "துணையொடு வதிந்த, தாதுண் பறவை” என்றே பதித்தார் எனின், அதுவும் குற்றமாம் என்க.

இனி. பேராசிரியரும் வதியும் என்றே கொண்டார் ஆதலானும்,பொருள் நெறியிலும் பொருந்துவது அதுவே