பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 காவிரி

இம் முதற் செய்யுளே,

"கிழவோள் பிறன்குன மிவையெனக் கூறிக்

கிழவோன் குறிப்பினை யுணர்தற்கு முரியள்”

-தொல் பொருள் 234.

என்ற சூத்திரத்தின்கீழ், தலைவி வேறொரு தலைவி யுடைய குணங்கள் இத்தன்மையவென்று தலைவற்குக் கூறி, அவள் மாட்டு இவன் எத்தன்மையனாயிருக் கின்றான் என்று தலைவன் குறிப்பினையறியக் கருதிய தற்கு உதாரணமாகக் காட்டியிருப்பதையும் அறியாது. ஒரிடத்தே ஒரு துறை பற்றி மேற்கோள் காட்டிய ஒரு செய்யுளையே, காட்டிய அவரே, வேறோர் இடத்தே அச்செய்யுளையே வேறு ஒரு துறைக்கு மேற் கோளாகக் காட்டார் என்பதையும் உணராது, 'தோழி கூறுங்கால், தலைவியரைக் கூறப்பெறாள் என்பது உம், பரத்தையரைக் கூறின், அவர்க்கு முதுக்குறைமை கூறிக் கூறுவளென்பது உங் கொள்க." என நச்சினார்க்கினியர் கூறியதனையும் உணராது, தோழிக்கு, இத்தகைய கூற்றுக்கள் உண்டா இன்றா என்பதையும் ஆராயாது. மெய்ப்பாடத்தையும், பொய்ப்பாடமாகப் பிறழ உணர்ந்து, மெய்ப்பாடத்தை நீக்கிப் பொய்ப் பாடத்தைப் பதிப்பித்தது, அவர்க்கு ஆழ்ந்த பொருளிலக்கணப் பயிற்சி' இன்மையினைக் காட்டுகிறது, -

இனி, ஐங்குறு நூற்றுப் பழைய உரைகாரர். 'பரத்தை தலைமகற்குச் சொல்லியது: பெதும்பைப் பருவத்தாள், ஒரு பரத்தையோடுகூடி மறைந்து ஒழுங்கா நின்றானென்பதறிந்து தலைவி புலந்துழி, 'இத் தவறு என்மாட்டில்லை; நீ, இப்புலவியை நீக்க வேண்டும்” என்று தோழிக்குத் தலைமகன் கூறும் புலவியை நீக்கக்கருதிய தோழி, அவளிளமை கூறி நகையாடிச் சொல்லியது: