பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர். கா. கோவிந்தன் 27

உமாம்'என்று துறை வடிப்பாராயினர். அவர் கூற்றுப்படி, இது, பரத்தை கூற்றாகவாவது, தோழி கூற்றாகவாவது இருத்தல் வேண்டுமேயன்றி, தலைவி கூற்றன்று யென்பது பெறப்பட்டது.

தலைவன், வேறொரு தலைவி பாலேனும், பரத்தை பாலேனும், வைத்திருக்கும் உள்ள முடைமையினை அறிதல் தலைவிக்கேயுரித்து. பரத்தைக்கின்று என்பது, "கிழவோள் பிறள் குணம்’ (தொ. பொ.234) என்பதனாற் பெறப்பட்டதாகலானும், தோழி கூற்றன்று என்பது மேலே பெறப்பட்டது ஆதலானும், இப்பத்திற்கு முந்தியபத்தாகிய தோழிக்குரைத்த பத்தில் 'இற்செறிப் பாரெனக் கேட்ட தலைமகள் வரையாது வந் தொழுகுந் தலைவன் சிறைப்புறத்தான்ாகத் தோழிக்குச் சொல் வியது' என்பன போன்ற தலைமகள் கூற்றுக்களே நிகழ் தலானும், அடுத்த பத்தாகிய, பாணர்க்குரைத்த பத் திலும், 'வாயில் வேண்டிவந்த பாணன் தலைமகள் காதன்மை கூறினானாகத், தலைமகள் வாயில் மறுப்பாள் அவற்குக் கூறியது” என்பது போன்ற, தலைமகள் கூற்றுக் களே நிகழ்தலானும், இடையில் உள்ள இப்பத்தில் உள் ளனவும், தலைவி கூற்றுக்களாகவே இருந்தல் வேண்டு மாதலானும், ஐங்குறு நூற்றுப்பழைய உரை கூறும் துறை குற்றமாதல் அறிக. அதைப்பின்பற்றி, "தலைவி கூறி" என்ற மெய்ப்பாடத்தைத் தோழி கூறி" என்று மாற்றி யதும் குற்றமாம் என்க.

'கெடுப்பது உங் கெட்டார்க்குச் சார்வாய்

மற்றாங்கே, யெடுப்பது உம் எல்லாம் மழை.' .

என்புழி, கெடுப்பது உம் என்பதற்கு, முன், பின் குறள் களில் மழையின்மையினையே கூறியதனால், மிக்க மழை