பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 காவிரி

பெய்தலினால் கேடுளவாகவும், 'மழை பெய்யாது நின்று கெடுப்பது உம்' எனப் பொருள் கூறியதும் காண்க.

நூல் பதிப்பிக்க விரும்பிவோர் தாம் பதிப்பிக்க விரும்பிய நூலைத் தக்க ஆசிரியர் ஒருவர் பால் முறை படக் கற்றல் வேண்டும். கற்று வருங்கால், பாடங்கள் பல மாறுபடத் தோன்றும். தோன்றிய அவைகளின் முன் னும் பின்னும் நோக்கியும், வேறு ஏடுகொண்டு ஒப்பு நோக்கியும், பொருளுடன் ஆராய்ந்தும், பொருந்தும் பாடங்களைக் கொள்ளுதல் வேண்டும். இவ்வாறு, பல காலும்,ஆராய்ந்து சேமித்து வைத்த குறிப்புக்களை, யுறு துணையாகக் கொண்டு நூல் பதிப்பித்தல் வேண்டும். அவ்வாறு ஒன்றும் செய்யாது முற்பதிப்பில் கண்டவற்றுள் சிலவற்றைத் தாம் வேண்டியவாறேதிருத்திக் கொண்டும், பயனற்ற குறிப்புக்கள் சிலவற்றைக் குறித்துக் கொண்டும்: பதிப்பிப்பதனால் கெடுவன இவ்வளவு என்பது, இவ் வெடுத்துக் காட்டான் இனிது விளங்கும். இதனால் அன்றோ, 'படித்தவன் பாட்டைக் கெடுத்தான்், எழுதி னவன் ஏட்டைக் கெடுத்தான்்” என்று வழங்குவா ராயினர்டு

-தமிழ்ப் பொழில் 1937-38 பக்கம் : 161