பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனக்குடவரும் பரிமேலழகரும்

உலகிடை வாழும் மக்கள் பலராலும் வழங்கப்பெற்று வரும் மொழிகள் பலவற்றுள்ளும்,உயர்தனிச் செம்மொழி யாய் விளங்குவது தமிழ்மொழியொன்றேயாம் என்பதும், 'திறமான புலமையெனில், வெளி நாட்டோர் அதை வணக்கம் செய்தல் வேண்டும்” எனக்கூறிய அனுபவ ஞானியும், கவிவாணரும் ஆகிய பாரதியாரின் கூற்றுக் கிணங்க எந்நாட்டினரும், எம்மதத்தினரும், எம்மொழி: யினரும் "எல்லாப்பொருளும் இதன்பால் உள; இல்லாத எப்பொருளும் இல்லை” எனக்கூறி, போற்றும் பண்புடை யதும், அமிழ்தினுமினிய நம் தெய்வத் தமிழ்நூலில் தலை சிறந்து என்றும் நின்று நிலவுவதும், அகப்பொருள் புறப்பொருள் எனத் செந்தமிழ்ச் சா ன் ேறா ரால் தொகுத்துக் கூறப்படும் அறமுதற் பொருள் களைத் திறம்பெற உணர்த்துவதும் ஆய நூல், தெய்வப் புலமைத் திருவள்ளுவனார் இயற்றிய திருக்குறள் என் னும் பெரு நூல் ஒன்றேயாம் என்பதும் பன்மொழிப் புலவர் பலர்க்கும் ஒப்பமுடிந்த உண்மையாகும்.

ஒப்புயர்வற்ற இவ்வுயர் தனிச் செந்தமிழ் நூலினை இயற்றிய ஆசிரியர் வள்ளுவப் பெருந்தகையார், வட வேங்கடம் தென்குமரியாயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து வழங்கிய உலக வழக்குகளையும், நூல் வழக்குகளையும்