பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 t காவிரி

ஆராய்ந்த பின்னரே இந்நூலினை இயற்றினாராவர்டு அதற்கு 'நல்லாற்றான் நாடியருள் ஆள்க; பல்லாற்றாற். மேரினும் அ.தே துணை' (குறள் 242) "யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை, யெனைத்தோன்றும் வாய்மை யின் அல்லபிற' (குறள் 300)'பகுத்துண்டு பல்லுயிரோம்பு தல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாந்தலை' (குறள் 322) என்ற அசிரியர் கூற்றுக்களே போதிய சான்றாதல் அறிக. -

இனி.இச்செந்தமிழ் நூலிற்கு உரைகண்டார் பதின்மர் என்ப, அப்பதின்மர் பெயரையும்,

“தருமர், மணக்குடவர், தாமத்தர்,நச்சர், பரிமேலழகர், பருதி,-திருமலையர், மல்லர், கவிப்பெருமாள், காளிங்கர், வள்ளுவனுாற். கெல்லையுரை யெழுதினோர்' .

-பழைய வெண்பா.

என்ற செய்யுளால் அறிக. அவ்வுரைகளுள், தமிழ்நாடு செய்த தவக்குறைவால், ஒழிந்தனபோக, எஞ்சிநின்றன . மணக்குடவர் பரிமேலழகர் என்பார் இயற்றிய உரைகள் இரண்டேயாம். இவ்விரண்டினுள், இச்செய்யுள் முறையே நோக்கின், மணக் குடவர் உரை இரண்டாவதாகவும், அழகர் உரை ஐந்தாவதாகவும் விளங்குகின்றன. இவற். றுள், ஒப்புயர்வற்று, ஆயுந்தோறும்இன்பம் தந்து ஆசிரியர் கருத்தைத் தெள்ளிதின் விள்ளுரச் செய்வது, தெள்ளு. பரிமேலழகன் செய்த உரை ஒன்றேயாம். அழகர், தான்் உரை கூறுதற்கு முன்னர்,தமக்கு முன்னிருந்த உரைகளைப் பன்முறையும் ஊன்றிப் படித்து,உண்மைப் பொருள்கண்டு உரை கூறியிருப்பது போன்றே யன்றோ,அவர்பின் வதிந்த ஆசிரியர்களும் உரை வகுத்திருப்பர்? அவ்வழி வகுத்த