பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் சா. கோவிந்தன் 35

மணக்குடவர் உரை:-எழுத்துக்களெல்லாம் அகர மாகிய எழுத்தைத் தமக்கு முதலாக உடையன; அவ்வண் -ணமே உலகம் ஆதியாகிய பகவனைத் தனக்கு முதலாக வுடைத்து என்றவாறு.

பரிமேலழகர் உரை :-எழுத்துக்களெல்லாம் அகர

மாகிய முதலையுடையன; அது போல உலகம் ஆதிபகவ னாகிய முதலையுடைத்து என்றவாறு,

ஈண்டு மணக்குடவர், "அகர முதல', 'பகவன் முதற்று" என்ற இரண்டனையும் வேற்றுண்மத் தொகை யாகக் கொண்டு பொருள் கூறியுள்ளார். பரிமேலழகர் பண்புத்தொகை யெனக்கொண்டு பொருள்கூறியுள்ளார். அழகர் கருத்துப்படி, அகரமும், பகவனும், விசேடணமாக வும், முதல் என்பது விசேடியமாகவும் பெறப்படு கின்றன. விசேடணம் விசேடியத்தை விசேடித்தா லாவது, அவ்விசேடகுணமில்லாத இனப்பொருளினிக்கி அவ்விசேடகுணமுடையதனை வரைந்து சுட்டுதலாம். வெண்தாமரையென்பதில், வெண்மை விசேடணம், தாமரை விசேடியம். வெண்மை தாமரையை விசேடிரித்த லாவது, பல நிறத்தாமரையினின்றும் வெண்மைப் பண் புடையதனை வேறு பிரித்துக்காட்டலாம்: அதே போன்று, அகரமாகிய முதல் எனவும், ஆதி பகவானாகிய முதலெனவும் பொருள் கூறின், பல முதலினின்றும், அகர மாகிய முதலையும், ஆதிபகவனாகிய முதலையும் வேறு பிரித்துக் காட்டுதல் பெறப்பட்டது. படவே பல முத லுண்மை பெறப்பட்டு, இறைவன்தன் முதல்வனாம் தன் மைக்கும்,அகரம் தனிமுதலாம் தன்மைக்கும்மாசுண்டாம் ஆதலாலும்அவ்வாறு கூறுதல்ஆசிரியர் வள்ளுவனார்க்கும் கருத்தன்றாமாதலானும் முதலாம் தன்மைக்கும் மாசுண் டாம் ஆதலாலும், அழகர் உரை பொருத்த முடைத்